வலிமை தயாரிப்பாளர் போனி கபூர் – ஆர் ஜே பாலாஜி இணையும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்..? அசத்தலாக வெளியான அப்டேட்!

ஆர் ஜே பாலாஜியின் அடுத்த படத்தின் புதிய அப்டேட்!

R. J. Balaji, Boney Kapoor, Zee Studio, BAYVIEW PROJECTS, Nayanthara, Vignesh Shivan, Anirudh Ravichander, Vijay Sethupathi 04-Mar-2022: வானொலி தொகுப்பாளராக வேலை செய்துவந்த ஆர் ஜே பாலாஜி, தனது நகைச்சுவையான மற்றும் தனித்துவமான பேச்சால் ரசிகர்களைக் கவர்ந்தவர். சினிமா விமர்சனங்களை செய்துவந்து, அதன் மூலம் கிடைத்த புகழ் வெளிச்சத்தால் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். முதலில் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் மட்டுமே கவனம் செலுத்திவந்த அவருக்கு “நானும் ரௌடிதான்” படம் திருப்புமுனையாக அமைந்தது.

அந்த படத்தின் வெற்றியை அடுத்து அவருக்கு பல படங்களில் வாய்ப்புக் கிடைத்தது. சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ மற்றும் முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்த ‘ஸ்பைடர்’ ஆகிய படங்களில் அவர் நகைச்சுவையாக மட்டும் இலலாமல் குணச்சித்திரமாக நடித்து தனது திறமையை நிருபித்தார். இதையடுத்து அவர் ஐசரி கணேஷின் வேல்ஸ் இண்டர்நேஷனல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் எல் கே ஜி என்ற அரசியல் பகடி படத்தில் அவரின் கதை, திரைக்கதையில் சிறந்த நடிப்பை வெளிக்காட்டி மக்களின் பார்வையை தன்பக்கம் திரும்ப வைத்திருந்தார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரபு என்பவர் இயக்கி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியால் மீண்டும் ஐசரி கணேஷோடு இணைந்து மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை சரவணன் என்பவரோடு இணைந்து இயக்கினார். மூக்குத்தி அம்மன் படத்தில் அம்மன் வேடத்தில் நயன்தாரா நடிக்க, மத்திய தரவர்க்க குடும்பஸ்தனாக ஆர் ஜே பாலாஜி நடித்திருந்தார். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான இந்த படமும் வெற்றிப்படமாக அமைந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான அம்மன் படமாக அமைந்ததால் மூக்குத்தி அம்மனுக்கு குடும்ப திரைப்பட ரசிகர்களிடையே நல்ல வரவேற்புக் கிடைததது.

இதையடுத்து ஆர் ஜே பாலாஜி இப்போது போனி கபூரின் “பே வியூ ப்ரொஜெக்ட்ஸ்” நிறுவனம் தயாரித்துள்ள புதிய படத்தில் இணைந்துள்ளார். படப்பிடிப்பு முழுவதும் முடிந்துள்ளதாக தெரிகிறது. இதுவரை படத்தைப் பற்றி அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்த நிலையில் இப்போது ஆர் ஜே பாலாஜி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் மார்ச் 18 ஆம் தேதி வெளியாகும் என தனது சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். இது சம்மந்தமாக அவர் மங்களகரமான போஸ்டர் ஒன்றையும் வெளியிடவே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.