கேஜிஎஃப் 2 மாஸான போஸ்டரோடு செம்ம அப்டேட் கொடுத்த படக்குழு! டிரைலர் மற்றும் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கேஜிஎஃப் 2 படக்குழு அறிவித்திருக்கும் மாசான அப்டேட்!

Yash, Srinidhi Shetty, Sanjay Dutt, Raveena Tandon, Archana Jois, Prakash Raj, Balakrishna, Malavika Avinash, Prashanth Neel, Ravi Basrur, Vijay Kiragandur, Karthik Gowda, Hombale Films, KGF 2 03-Mar-2022: கன்னட ஹீரோ யாஷ் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் நடிப்பில் பிரசாந்த் நீல் பிரம்மாண்டமாக இயக்கிய திரைப்படம் “கேஜிஎஃப்”, இது தமிழிலும் வெளியாகி பெரியளவில் வரவேற்கப்பட்டு வசூலில் சாதனை படைத்திருந்தது.

இப்படத்தின் மூலம் கன்னட சினிமாவை வேறொரு உயரத்துக் கொண்டு சென்ற படமாக ‘கேஜிஎப்’ வெளியாகியிருந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு மிகப்பிரம்மாண்டமாக வெளியான இந்த திரைப்படம் தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. பின்னர் ஓடிடியில் வெளியான போது அதன் ரசிகர்கள் எண்ணிக்கை மேலும் பல மடங்கு உயர்ந்தது. சமீபத்தைய ஆண்டுகளில் வெளியான சிறந்த ஆக்ஷன் படங்களில் ஒன்றாக ‘கேஜிஎப்’ இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

யாஷ் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கிய இந்த படத்தை மிகப்பிரம்மாண்டமாக விஜய் கிரகந்தூர் தயாரித்திருந்தார். மும்பை மற்றும் கர்நாடகாவின் அடையாளங்களில் ஒன்றான கோலார் தங்க வயல் பகுதிகளில் நடக்கும் விதமாக கதைக்களம் அமைக்கப்பட்டு இருந்தது. நேர்த்தியான திரைக்கதையாலும், பரபர ஆக்ஷன் காட்சிகளாலும் ரசிகர்களைக் கட்டிப்போட்டது இந்த திரைப்படம். எப்படி பாகுபலிக்கு பின்னர் பிரபாஸ் பேன் இந்தியா நடிகராக அறியப்பட்டாரோ அது போல கேஜிஎப் படத்துக்குப் பிறகு யாஷுக்கு இந்தியா சினிமா ரசிகர்கள் மத்தியில் செம்ம க்ரேஸ் கூடியுள்ளது.

இத்தகைய எதிர்பார்ப்புகளோடு 3 வருட காத்திருப்புக்கு பின்னர் ஏப்ரல் 14 ஆம் தேதி கேஜிஎப் 2 பேன் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது. முந்தைய பாகத்தில் இல்லாத சஞ்சய் தத் இதில் அகிரா என்ற வில்லன் வேடத்தில் நடிக்கிறார். அவரின் கதாபாத்திர போஸ்டர்கள் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்தன. இதுவரை படம் சம்மந்தமாக சில போஸ்டர்களும் டீசர் ஒன்றும் இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் ரிலீஸ் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஏக்கத்தோடு காத்திருந்தனர். அந்த ஆர்வத்துக்கு இரைபோடும் விதமாக படக்குழு டிரைலர் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. இன்று டிவிட்டரில் ‘மார்ச் 27 ஆம் தேதி மாலை 6.40 மணிக்கு டிரைலர் வெளியாகும்’ என அறிவித்துள்ளது. மேலும் டிரைலர் ரிலீஸ் தேதியோடு ஒரு புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. படம் ஏப்ரல் 14 ஆம் தேதி கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.