அஜித் AK61 கெட்டப்பில் குடும்பத்துடன்! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!

தல அஜித் குடும்பத்துடன் புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல்!

Ajith Kumar, Janhvi Kapoor, Huma Qureshi, Kartikeya Gummakonda, Pugazh, Yogi Babu, H. Vinoth, Yuvan Shankar Raja, M. Ghibran, Boney Kapoor, Valimai, AK 61 03-Feb-2022: இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படம் (24.02.2022) அன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் ரிலீசாகி உள்ளது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் மொத்தம் 607 திரையரங்குகளில் வலிமை படம் ரிலீசாகி இருந்தது. வலிமை படத்தை சினிமா பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இரண்டு முறை தேசிய விருது வென்ற தயாரிப்பாளர் BOFTA தனஞ்செயன், அருண் விஜய், வெங்கட் பிரபு, விக்னேஷ் சிவன் ஆகியோரும் வலிமை படத்தை பார்த்து கருத்து தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை இந்திய திரைப்படங்களில் அதிக ரசிகர்கள் பார்க்க ஆர்வம் காட்டும் படமாக BMS-ல் வலிமை படம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.வலிமை படத்தில் வில்லனாக கார்த்திகேயாவும், அஜித்திற்கு நண்பியாக ஹூமா குரேஷி, ராஜ் ஐயப்பா நடிக்க, கதிர் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றியுள்ளார்.

நிரவ் ஷா ISC ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றியுள்ளார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்க, யுவன் சங்கர் ராஜா உடன் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மற்றும் போனி கபூருடன் இணைந்து ஜி ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

வலிமைக்கு அடுத்து நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK-61 படத்தின் திட்டம் ஒரு ஆண்டுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. வலிமை படத்தை தொடர்ந்து அஜித்குமாரின் 61வது படம் துவங்க உள்ளது. AK-61 படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் 9 ஆம் தேதி முதல் துவங்க உள்ளது என்று சினிமா வட்டாரத்தில் நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன.

AK-61படத்தின் முதல் லுக் உடன் போனிகபூர் டிவிட்டரில் சில நாட்களுக்கு முன் போட்டோவை பகிர்ந்துள்ளார். அதில் கருப்பு வெள்ளையில் இருள் சூழ தாடியுடன் , காதில் கடுக்கனுடன் நடிகர் அஜித் புகைப்படம் இடம் பெற்றது. AK-61 படத்திற்கான முன் தயாரிப்பு என போனி கபூர் அறிவித்து இருந்தார்.

இந்நிலையில் நடிகர் அஜித் குமார் தனது குடும்பத்தினர் உடன், தனது மகன் ஆத்விக்கின் பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றனர். மேலும், இந்த புகைப்படங்களில் அஜித் நீண்ட தாடியுடன் செம ஸ்மார்ட் லுக்கில் உள்ளார்.

நடிகர் அஜித் உடன் அவர் மனைவி ஷாலினி, மச்சான் ரிச்சர்ட், குழந்தைகளான அனோஸ்கா, ஆத்விக் உள்ளிட்டோரை புகைப்படத்தில் காணக்கூடியவாறு உள்ளது.