வடிவேலுவுக்கு ஜோடியான ஷிவானி பதிவிட்ட போட்டோ இணையத்தில் வைரல்! தலைவன் வேற லெவல்!

வடிவேலுவுடன் ஷிவானியின் புகைப்படம் வைரல்!

Vadivelu, Suraj, Redin Kingsley, Santhosh Narayanan, Shivani Narayanan, Subaskaran Allirajah, Sivaangi Krishnakumar, Lyca Productions, Anandaraj, Naai Sekar Returns, Bigg Boss Ultimate Tamil, Cook With Comali 02-Feb-2022: இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’. இதில் வைகைப்புயல் வடிவேலு நாயகனாகவும், மற்றும் ‘டாக்டர்’ பட புகழ் நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷுவும், ‘குக் வித் கோமாளி’ புகழ் நடிகை சிவாங்கி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று வடிவேலுவுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளது “எனது மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை அவரது படங்களுடன் பார்ப்பதில் இருந்து அவருடன் திரை இடத்தை பகிர்ந்து கொள்வது வரை. பழம்பெரும் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து மீண்டும் நடிக்கும் நாயகி சேகருக்காக லைக்கா நிறுவனத்துடன் உடன் இணைந்ததில் மகிழ்ச்சி” என குறிப்பிட்டுள்ளார்.