ராஜமௌலி படத்திற்கு சிவகார்த்திகேயனின் பெருந்தன்மையான உதவி! நன்றி தெரிவித்த லைக்கா..!

ஆர் ஆர் ஆர் படத்துக்காக சிவகார்த்திகேயன் செய்த உதவி!

Sivakarthikeyan, Priyanka Mohan, S. J. Surya, Samuthirakani, Soori, Sivaangi Krishnakumar, Cibi Chakaravarthi, Anirudh Ravichander, Lyca Productions, Don, S. S. Rajamouli, M. M. Keeravani, D. V. V. Danayya, N. T. Rama Rao Jr, Ram Charan, Alia Bhatt, Ajay Devgn, RRR 02-Mar-2022: லைகா மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்துள்ள ‘டான்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மார்ச் 25 என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இப்போது மே 13 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே சிலமுறை டான் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றிவைக்கப்பட்ட நிலையில் இப்போது மீண்டும் ஒருமுறை மே 13 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் டான் திரைப்படம் மார்ச் 25 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டு படத்தின் ப்ரமோஷன் பணிகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.

ஆனால் அதே நாளில் இயக்குனர் ராஜமௌலி ஜூனியர் என் டி ஆர் மற்றும் ராம்சரண் ஆகியோர்களை வைத்து பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ள ‘ஆர் ஆர் ஆர்’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்திருந்தனர். இது இருக்க பாகுபலிக்கு பிறகு ராஜமௌலி படங்களுக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது என்பது சாத்தியமானது. இந்த படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை லைகா நிறுவனம்தான் கைப்பற்றியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்போது ஆர் ஆர் ஆர் படத்துக்காக சிவகார்த்திகேயன் தன்னுடைய ‘டான்’ படத்தின் ரிலீஸ் தேதியை கிட்டத்தட்ட 50 நாட்களுக்கு ஒத்தி வைத்துள்ளார். ஒரு நடிகராக தயாரிப்பாளராக சிவகார்த்திகேயனின் இந்த முடிவு பெருந்தன்மை வாய்ந்தது.இச்செயல் அனைவரையும் நெகிழவைத்துள்ளதையடுத்து அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக லைகா நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில் ‘சிவகார்த்திகேயனின் பெருந்தன்மையான செயலுக்கு நன்றி. மார்ச் 25 ஆம் தேதி திட்டமிட்டிருந்த தன்னுடைய பட ரிலீஸை தள்ளிவைத்துக் கொள்ள ஒப்புக்கொண்டார். இரண்டு படங்களுமே ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற படங்கள். ரசிகர்களே டான் படத்தின் ரிலீஸ் தேதியை மே 13 ஆம் தேதிக்கு மாற்றுகிறோம். நீங்கள் எப்போதும் எங்கள் மீது பொழியும் அன்பையும் ஆதரவையும் கொடுப்பீர்கள் என நம்புகிறோம்’ என லைக்கா நிறுவனம் கூறியுள்ளது.