‘எதற்கும் துணிந்தவன்’ மாசான டிரைலர்! நான் தான்டா ஜட்ஜு.. மிரட்டலான ஆக்ஷன்!

எதற்கும் துணிந்தவன் அதிரடியான ஆக்ஷன் டிரைலர்!

suriya, Priyanka Mohan, Ciby Bhuvana Chandran, Vinay Rai, Sathyaraj, Soori, Pandiraj, D. Imman, Kalanithi Maran, Sun Pictures, Etharkkum Thunindhavan 02-Feb-2022: இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் படப்பிடிப்பு சென்னை, காரைக்குடி, தென்காசி பகுதியில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் படப்பிடிப்பும், தயாரிப்பு பணிகளும் முடிவடைந்து இந்த படம் சென்சாராகி உள்ளது. CBFC சென்சாரில் U/A சான்றிதழ் பெற்றுள்ளது. மேலும் இந்த படம் 150:38 (2:30:38) மணி நிமிடங்கள் ஓடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர்களின் மேற்பார்வையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் இந்த படத்தை பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் ஒரே நாளில் PAN INDIA படமாக வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படம் முதலில் வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி 202-இல் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. பின் கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. பின் ‘எதற்கும் துணிந்தவன்’ படம் வரும் மார்ச் மாதம் 10 ஆம் தேதி வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தின் போஸ்டர்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரத்னவேலு ISC ஒளிப்பதிவு செய்கிறார் இவர் சூர்யா நடித்த ‘நந்தா’, ‘வாரணம் ஆயிரம்’ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் மையமாக பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் அமைந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் படத்தின் டிரைலர் இன்று (02.03.2022) வெளியாகி உள்ளது. மாஸ் ஆன சண்டைக்காட்சிகளும், காமெடி, ரொமாண்டிக் காட்சிகளின் தொகுப்பும் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளன. டிரெய்லரில் சூர்யா, பிரியங்கா மோகன், வினய், சரண்யா பொன்வண்ணன், சத்யராஜ், சுப்பு பஞ்சு ஆகியோர் தோன்றுகின்றனர். ஆக்ரோஷமான பஞ்ச் வசனங்களும், ஆக்சன் காட்சிகளும் இந்த டிரெய்லரில் இடம் பெற்றுள்ளன.