கமலின் ‘விக்ரம்’ படத்தின் துப்பாக்கி சத்தத்துடன் வெளியான மாசான வீடியோ அப்டேட்!

விக்ரம் படத்தின் புதிய வீடியோ அப்டேட் !

Kamal Haasan, Lokesh Kanagaraj, Anirudh Ravichander, Fahad Fazil, Vijay Sethupathi, Raaj Kamal Films International, Girish Gangadharan, Arjun Das, Kalidas Jayaram, Andrea Jeremiah, Shivani Narayanan, Vikram 02-Feb-2022: உலக நாயகன் கமல்ஹாசன் நடித்துக்கொண்டிருந்த ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் முடிவடைந்துள்ளது. கமல்ஹாசன் நடிக்கும் “விக்ரம்” படத்தை, மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர். கமல்ஹாசனின் மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார்.

மற்றும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானியும், மைனா நந்தினியும் நடிக்கின்றனர். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

இந்தப் படத்திற்கு ‘ஜல்லிக்கட்டு’ படத்திற்காக தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ISC ஒளிப்பதிவு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் முன்னோட்டம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விக்ரம் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. இதனை சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக கமலுடன் தான் இருக்கும் BTS புகைப்படத்தை பகிர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்து இருந்தார். மேலும் விக்ரம் படம் 2022 கோடை விடுமுறைக்கு வெளியாகும் எனவும் அறிவித்துள்ளார். கடந்த டிசம்பரில் தொடங்கிய இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்றுடன் (02.03.2022) நிறைவடைந்தது.

இதனை மேக்கிங் BTS வீடியோவை வெளியிட்டு லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார். அதில், 110 நாட்கள் படப்பிடிப்பு முடிந்துள்ளது. அசாதாரண முயற்சிக்காக ஒட்டுமொத்த நடிகர்கள் மற்றும் விக்ரம் குழுவினருக்கு நன்றி!” என லோகேஷ் கூறியுள்ளார்.