வைகைப் புயலுடன் ஷிவானி நாராயணனின் புகைப் படங்கள் இணையத்தில் வைரல் 2 மார்ச் 2022

Shivani Narayanan 2nd Mar 2022

Shivani Narayanan, Actress, Celebrity, Model, Bigg Boss Tamil, Naai Sekar Returns 2nd Mar 2022 : ‘தலை நகரம்’ புகழ் இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. இதில் நடிகர் வடிவேலு மீண்டும் கதையின் நாயகனாக நடிக்கிறார்.நடிகர் வடிவேலுவுடன் ‘குக்கூ வித் கோமாளி ‘ மற்றும் ‘சூப்பர் சிங்கர்’ போட்டியாளர் சிவாங்கி கிருஷ்ணகுமார், ‘டாக்டர்’ நட்சத்திரம் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், முனிஷ்காந்த், ராவ் ரமேஷ், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், லொள்ளு சபா. சேசு, பிரசாந்த் ரங்கசாமி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்தப் படத்தை சுபாஸ்கரன் அல்லிராஜாவின் லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. படத்தின் எடிட்டிங் செல்வா ஆர்.கே.

இப்படத்தில் நாயகியாக நடிக்க பிரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியுள்ளதாக முன்னதாக தகவல் வெளியானது. ஆனால் மற்ற படங்களில் பிஸியாக இருந்ததால் இந்த திட்டத்தை ரத்து செய்தார். ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர் ஷிவானி நாராயணன் பிரியா பவானி ஷங்கரின் கதாபாத்திரத்திற்கு பதிலாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின. மார்ச் மாதம் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ டீமில் இணைவார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது ஷிவானி நாராயணன் வைகைப் புயலுடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.