விஜய் – அஜித் பட இயக்குனருடன் கைகோர்க்கும் அனுஷ்கா ஷெட்டி!

அனுஷ்கா ஷெட்டி நடிக்கும் பெண் மையப் படம் பற்றிய தகவல்!

Vijay, Ajith, Anushka Shetty, A. L. Vijay, Kireedam, Thalaivaa 01-Mar-2022: தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. தெலுங்கு மற்றும் தமிழில் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம், ஆர்யா, கார்த்தி, நாகர்ஜூனா, ரவி தேஜா, பிரபாஸ் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தனிப்பட்ட நாயகியாகவும் பஞ்சமுகி, அருந்ததி போன்ற படங்களில் நடித்து தனது முத்திரையை பதித்துள்ளார்.

கடைசியாக மாதவனுக்கு ஜோடியாக சைலன்ஸ் என்ற படத்தில் அனுஷ்கா நடித்திருந்தார். அதன் பிறகு, அவர் பற்றி வேறு எந்த புதியபடங்களையும் அறிவிக்கவில்லை. இப்போது, ​​​​நடிகை தனது அடுத்த படத்திற்காக பிரபல தமிழ் இயக்குனர் ஏ.எல்.விஜய்யுடன் இணைய உள்ளதாக நம்பத்தகுந்த சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இப்படம் பெண்ணை மையமாக கொண்டு உருவாக இருப்பதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏ.எல்.விஜய், நடிகர் அஜித் நடித்த ‘கிரீடம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். பின் ‘தலைவா’ படத்தை நடிகர் விஜய் நடிப்பிலும், தாண்டவம் படத்தை சியான் விக்ரம் நடிப்பிலும் இயக்கியவர். கடைசியாக கங்கனா ரனாவத்தை வைத்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக வைத்து ‘தலைவி’ படத்தை இயக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.