கார்த்தியின் ‘சர்தார்’ படத்தின் வெளிவந்த புதிய தகவல்கள்!

சர்தார் படத்தின் புதிய அப்டேட்!

Karthi, P. S. Mithran, S. Lakshman Kumar, Raashi Khanna, Rajisha Vijayan, Simran, G. V. Prakash Kumar, Sardar 01-Feb-2022: கடைசியாக கார்த்தி நடிப்பில் சுல்தான் படம் திரை அரங்கில் வெளியானது. அதனைத் தொடர்ந்து கார்த்தி, பொன்னியின் செல்வன் படபிடிப்பிலும், விருமன் படத்தின் படப்பிடிப்பினை நடித்து முடித்தார். சர்தார் படத்தின் ஆரம்ப படப்பிடிப்பு சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. பின்னர் கொரோணா காரணமாக படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது. நடிகர் கார்த்தியின் 22வது படம் ‘சர்தார்’ என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் மீண்டும் சில தினங்களுக்கு முன்பு சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற்றது. இதற்கிடையில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் கார்த்தி கலந்து கொண்டார்.

பின்னர் விருமன் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். விருமன் படத்தின் படப்பிடிப்பு மதுரை தேனி மாவட்ட பகுதியில் நடந்தது. இதன் காரணமாக சர்தார் படத்தின் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன் ஏற்காட்டில் நடிகர் கார்த்தி குதிரை சவாரி செய்யும் புகைப்படங்கள் வெளியாகின. விடுமுறை தின கொண்டாட்டத்திற்காக ஏற்காட்டில் ஓய்வு எடுக்கிறாரா? அல்லது சர்தார் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஏற்காடு பகுதியில் நடந்து வருகிறதா என கார்த்தி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேட்டு வந்தனர். அப்போது சர்தார் படக்குழு இது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

பின்னர் சென்னையில் சர்தார் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கி நடைபெற்றது. இந்நிலையில் இந்த படப்பிடிப்பில் ராஷிகண்ணாவும் இணைந்துள்ளார். சென்னையில் தற்போது நடைபெற்று வரும் படப்பிடிப்பு நிறைவுற்றதும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கொடைக்கானல் மற்றும் மைசூரில் நடைபெற உள்ளது என தகவல்கள் தெரியவந்திருக்கின்றன.

இப்படத்தை இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் இயக்குகிறார் என்பதும் குறிபிடத்தக்கது. ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்தப்படத்தின் மோஷன் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

மேலும் இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும் ராஜிஷா விஜயனும் நடிக்கின்றனர்‌. ரூபன் படத்தொகுப்பு செய்ய, திலீப் சுப்பராயன் சண்டைபயிற்சி இயக்குனராக பணியாற்றுகிறார். கலை இயக்குனராக கதிர் பணியாற்றுகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.