நட்ச்சத்திர பட்டாளமே நடிக்கும் சுந்தர்.C இன் புதிய படம்! பிரபல நடிகர்கள் இவர்களா!!

சுந்தர்.C இன் புதிய படம் பற்றிய தகவல்!

Sundar. C, Jiiva, Jai, Srikanth, Kushboo, Samyuktha Shanmuganathan, Dhivyadharshini, Bigg Boss Tamil , Bigg Boss Ultimate, Yuvan Shankar Raja: 01-Mar-2022: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் சுந்தர்.C என்பது அறிந்ததே. இவர் பல முன்னணி நடிகர்களை இயக்கி தமிழ் சினிமாவில் அசராத இடத்தை பிடித்தவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அருணாச்சலம் படத்தை இயக்கிய பெருமைக்குரியவர். தற்போது அவர் இயக்கும் படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கும் என சொல்லப்பட்டுவந்த நிலையில் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்றினை வெளியிட்டுள்ளது படக்குழு.

மேலும் ஊட்டியில் நடைபெற்று வரும் சுந்தர்.சி அவர்களின் அடுத்த பட ஷூட்டிங்கில் இணைந்துள்ளார் சம்யுக்தா சண்முகநாதன். ஏற்கனவே, டிடி, ஐஸ்வர்யா தத்தா, ரைசா வில்லியம்ஸ், அம்ரிதா அய்யர், ஜீவா, ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் பணிபுரிந்துவரும் இந்நிலையில் சம்யுக்தாவும் தற்போது இணைந்திருக்கிறார்.

இதுகுறித்து சம்யுக்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,” சுந்தர்.சி அவர்களின் இயக்கத்தில், ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், டிடி, ஐஸ்வர்யா ஆகியோரின் நடிப்பில் உருவாகிவரும் படத்தில் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஊட்டியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இது மிக அருமையாக இருக்கப் போகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி பல திரை நட்சத்திரங்களுடன் நடைபெற்றுவரும் இந்தப் படத்தை நடிகை குஷ்புவின் அவ்னி மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற இந்தப் பூஜையில் முதற்கட்ட படப்பிடிப்புகள் சென்னையிலும் பிறகு ஊட்டியில் ஒரே ஷெடியூலில் படப்பிடிப்பு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மொத்த படக்குழுவும் ஊட்டியில் சங்கமித்துள்ளது. ஃபேமிலி என்டர்டெயின்மெண்டாக உருவாக இருக்கும் இந்தப் படத்தில் அடுத்தடுத்து திரை நட்சத்திரங்கள் இணைந்துவருவது ரசிகர்களின் எதிர்ப்பு அதிகரித்துள்ளது.

இன்னும் பெயர் இடப்படாத இந்தப் படம் கபூர் & சன்ஸ் என்னும் இந்திப் படத்தின் தமிழாக்கம் என பேச்சு எழுந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் குஷ்பு அதனை மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், காமெடி டிராக்கில் முத்திரை பதித்த சுந்தர்.சி இன் புது படம் குறித்து வெளியான அப்டேட் பற்றி தற்போது நெட்டிசன்கள் பரபரப்புடன் பேசிவருகின்றனர்.