தனுஷ் பாடலை முறியடித்த அரபிக் குத்து பாடல்! சாதனை படைத்த சிறப்பு!

அரபிக் குத்து பாடல் படைத்த சாதனை!

Vijay, Beast, Nelson Dhilipkumar, Anirudh, Sivakarthikeyan, Jonita GAndhi, Maari 2, Yuvan Shankar Raja, Dhanush, Sai Pallavi 28-Feb-2022: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் படத்தின் புதிய அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகிவருகின்றன. சமீபத்தில் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரமோவை படக்குழு வெளியிட்டிருந்தது. இது ரசிகர்கள் மத்தியிலும் திரை பிரபலங்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரமோவை தொடர்ந்து முதல் பாடலான ‘அரபிக் குத்து’ பாடல் சமீபத்தில் வெளியானது. அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் எழுதியிருந்த இந்த பாடலை அனிருத், ஜோனிட்டா காந்தி இருவரும் பாடியுள்ளனர். இந்நிலையில் அந்த பாடல் வெளியான 12 நாட்களிலேயே, யூடியூபில் 10 கோடி பார்வையாளர்களை அசத்தியுள்ளது. இதனை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

முன்னர் மாரி 2 படத்தின் ‘ரவுடி பேபி’ பாடல் “யுடியுப்” இல் வெறும் 16 நாட்களில் 100 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்திருந்தது. எவ்வளவோ சூப்பர் ஹிட் பாடல்கள் வந்தும் மாரி 2 படத்தின் ரவுடி பேபி பாடலை முறியடிக்க முடியாமல் இருந்த நிலையில் தற்போது விஜயின் “பீஸ்ட்” படத்தின் ‘அரபிக் குத்து’ பாடல் வெறும் 12 நாட்களில் 100 மில்லியன் பார்வைகளை கடந்து மாரி 2 ரவுடி பேபி பாடலை முறியடித்து புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளது.

இதை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மும்மரமாக கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.