அருண் விஜய் – ஹரி இணையும் “யானை” படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

அருண் விஜயின் யானை படம் ரிலீஸ் தேதி!

Arun Vijay, Hari, G V Prakash Kumar, Priya Bhavani Shankar, Prakash Raj, Radhika Sarathkumar, Yogi Babu, Samuthirakani, Imman Annachi, Pugazh 28-Feb-2022: தமிழ்த் திரையில் இடையறாத உழைப்பினால் அசத்தி வரும் நாயகன் அருண் விஜய், தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இயக்குநராக வெற்றிநடைபோடும் இயக்குநர் ஹரியின் இயக்கத்தில் ‘யானை’ எனும் படத்தில் நடித்து வருகிறார்.

அருண் விஜய் ஹீரோ என்பதை விட வில்லன் கதாபாத்திரத்திலும் தனது அசத்தலான நடிப்பில் அனைவரையும் கவர்ந்தவர். முன்னர் வெளியாகி சக்கைபோடு போட்ட ‘என்னை அறிந்தால்’ படத்தில் அருண் விஜய் வில்லன் கதாபாத்திரத்தில் அவரது மிரட்டலான நடிப்பை வெளிக்காட்டி அனைவரின் பாராட்டுக்களை பெற்றவர்.

இந்த படத்தில் நடிகர் அருண் விஜய்யுடன் நடிகர்கள் ப்ரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், கருடா ராம், புகழ், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, அம்மு அபிராமி, ஐஸ்வர்யா, போஸ் வெங்கட், ஜெயபாலன் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

நடிகர் அருண் விஜய் இதுவரை ஏற்றிராத கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்துள்ளதாக கூறப்படுவதுடன், இந்த படம் கிராமம் மற்றும் நகர பின்னணியில், இயக்குநர் ஹரிக்கே உண்டான விறுவிறுப்பான திரைக்கதையுடன் அட்டகாசமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. இப்படத்திற்காக இராமேஸ்வரத்தில் தீவு போன்ற பிரமாண்ட செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டதுடன், தூத்துகுடி, காரைக்குடி, பழனி மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது.

மேலும் ஜி.வி.பிரகாஷ் குமார் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்வதுடன், அந்தோணி எடிட்டிங் செய்துள்ளார். அனல் அரசு சண்டை பயிற்சியை அளிக்க, பாபா பாஸ்கர் மற்றும் தினா நடனம் அமைத்துள்ளனர். டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை சந்தியா கிஷோர்குமார் இணை தயாரிப்பு செய்துள்ளார்.

இந்நிலையில் இந்த திரைப்படம் வரும் மே மாதம் 6-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.