ஆதரவற்ற குழந்தைகளை நெகிழ வைத்த அஜித் ரசிகை!

அஜித் ரசிகர் நெகிழவைத்த செயல்!

Ajith, Ajith Kumar, H. Vinoth, Boney Kapoor, Huma Qureshi, Kartikeya Gummakonda, Chaitra Reddy, Pugazh, Valimai 28-Feb-2022: இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படம் கடந்த (24.02.2022) அன்று திரையில் வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் ரிலீசாகி உள்ளது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வலிமை படம் BOOK MY SHOW தளத்தில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களால் விரும்பப்பட்டுள்ளது.

இதுவரை இந்திய திரைப்படங்களில் அதிக ரசிகர்கள் பார்க்க ஆர்வம் காட்டும் படமாக வலிமை படம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.வலிமை படத்தில் வில்லனாக கார்த்திகேயாவும், அஜித்திற்கு நண்பியாக ஹூமா குரேஷி, ராஜ் ஐயப்பா நடிக்க, கதிர் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றியுள்ளார். மேலும் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார், மற்றும் போனி கபூருடன் இணைந்து ஜி ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் வாழும் அஜித் ரசிகர் தர்ஷா என்பவர், பாண்டிச்சேரி பிரெஞ்ச் சிட்டி அஜித் ரசிகர் மன்றம் மூலம் ஆதரவற்ற 150 குழந்தைகளுக்கும் பிரத்யேகமாக சண்முகா சினிமாஸில் டிக்கெட் எடுதது பார்க்க வைத்தனர். இந்த நிகழ்வு சமூக வலைதளங்களிலும், நேரடியாக சமூகத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.