‘அரபிக்குத்து’ பாட்டுக்கு கடற்கரையில் குத்து நடனம் போட்ட நடிகை வேதிகா! வீடியோ வைரல்!

அரபிக் குத்து பாடலுக்கு வேதிகா டான்ஸ் வீடியோ வைரல்!

Vijay, Thalapathy, Nelson Dilipkumar, Anirudh Ravichander, Sivakarthikeyan, Jonita Gandhi, Kalanithi Maran, Manoj Paramahamsa, Vedhika, Sun Pictures, Beast 26-Feb-2022: இயக்குனர் நெல்சன் திலிப்குமர் தற்போது விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார், மற்றும் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் நடிகை வேதிகா தனது சமூக வலைத்தளத்தில் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி பதிவேற்றம் செய்துள்ளார்.

‘பீஸ்ட்’ படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் 3 போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை ஏப்ரல் 2022ல் திரையில் வெளியிட படக்குழு முன்னர் அறிவித்தனர். பீஸ்ட் படத்தின் வெளியீடு தமிழ் புத்தாண்டு ஏப்ரல் மாதத்தில் 14 ஆம் நாள் அன்று வெளியாக உள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பீஸ்ட் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து பாடல், கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியானது. சிவகார்த்திகேயன் இந்த பாடலை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அனிருத் இசையமைத்து ஜோனிதா காந்தியுடன் இணைந்து பாடியுள்ளார்.

மேலும் இசையமைப்பாளர் அனிருத், நடிகை சமந்தா, இயக்குனர் அட்லி, பாடகி ஜோனிதா காந்தி உள்ளிட்ட பலரும் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை தமது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர். இந்த பட்டிலில் நடிகை வேதிகாவும் இடம்பிடித்துள்ளார். கடற்கரையில் பீச் உடையில் இந்த பாடலுக்கு நடமாடியுள்ளார். இந்த நடன வீடியோ 6 லட்சம் பார்வையாளர்களையும், 1 லட்சத்துக்கும் மேலதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது என்பதை அவதானிக்க முடிகிறது.