அஜித்தை பெருமைப்படுத்திய நடிகை குஷ்பூ! தல உனக்குமட்டும் தான் இப்டி கூட்டம்…!

அஜித்தை நெகிழ்ந்து பாராட்டிய குஷ்பூ!

Ajith, Ajithkumar, H. Vinoth, Boney Kapoor, Huma Qureshi, Kartikeya Gummakonda, Chaitra Reddy, Pugazh, Kushboo, Valimai 26-Feb-2022: அஜித், ஹூமா குரேஷி உள்ளிட்ட பலர் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தற்போது உலகமெங்கும் வெளியாகி இருக்கும் திரைப்படம் வலிமை. இப்படத்தின் ரிலீசையொட்டி ரசிகர்கள் ஆரவாரத்துடன் தியேட்டர்களில் கொண்டாடி வருகின்றனர். பட்டாசு வெடித்தும், மேளதாளத்துடன் நடனம் ஆடியும் கட்-அவுட் வைத்தும் திருவிழா போல் ரசிகர்கள் கொண்டாடினர்.

மேலும் இப்படத்தை பார்த்த திரையுலகினர் பலர் அவர்களுடைய கருத்துக்களை சமூக வலைத்தளங்களூடாகவும் மீடியாகளிலும் தெரிவித்து வருகின்றனர். ‘வலிமை’ படத்தை திரை உலக பிரபலங்களும் ரசிகர்களும் பாராட்டி வரும் நிலையில் பலரும் தங்களது வாழ்த்துக்களை அஜித்துக்கும், வலிமை படக் குழுவினர்களுக்கும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் வலிமை படத்தை பார்த்த நடிகை குஷ்பூ படத்தையும் அஜித்தையும் பாராட்டியுள்ளார். இதனை அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “தல உனக்கு மட்டும்தான் இப்படி கூட்டம் வருது” எனக் குறிப்பிட்டுள்ளார்.