‘தளபதி 66’ திரைப்படத்தில் விஜயுடன் இணைகிறாரா.. பிரபல தெலுங்கு ஹீரோ!

‘தளபதி 66’ படத்தில் எதிர்பார்க்கப்படும் பிரபல தெலுங்கு ஹீரோ!

Vijay, Thalapathy 66, Thalapathy, Nani, S. S. Rajamouli, Vamshi Paidipally, Dil Raju, S. Thaman, Beast 26-Feb-2022: தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’பீஸ்ட்’ திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவருடைய அடுத்த படமான ’தளபதி 66’ திரைப்படம் அதே ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளதாகவும் இந்த படத்திற்காக செட் அமைக்கும் பணியும் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படங்களில் ஒன்று ‘நான் ஈ’. இந்த திரைப்படத்தில் நாயகனாக நடித்த நானி, ‘தளபதி 66’ திரை படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இது குறித்த உறுதி செய்யப்பட்ட தகவல் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

‘தளபதி 66’ திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இந்த படத்தில் எஸ் தமன் இசை அமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிப்பில் உருவாகும் இந்த படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு அல்லது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.