‘ராதே ஷ்யாம்’ படத்தின் யுவன் குரலில் வெளிவந்த பாடல்!
Yuvan Shankar Raja, Justin Prabhakaran, Prabhas, Pooja Hegde, Radha Krishna Kumar, Radhe Shyam 25-Feb-2022: ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் யு வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடித்துள்ள ‘ராதே ஷியாம்’, மார்ச் 11 அன்று தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.

காதலுக்கும் விதிக்கும் இடையே நடைபெறும் போராட்டமான ‘ராதே ஷியாம்’ படத்தில் விக்ரம் ஆதித்யா என்ற கைரேகை நிபுணராக பிரபாஸ் நடித்துள்ளார். அவரது காதலியாக டாக்டர் பிரேர்னா எனும் கதாபாத்திரத்தில் பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர், பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றன.
இப்படத்தில் பாக்கிய ஸ்ரீ, சச்சின் ஹெடெக்கர், குணால் ராய் கபூர், ஜெகபதி பாபு, ப்ரியதர்ஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராதே ஷியாம் திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவை கையாண்டுள்ளார். இந்நிலையில் படத்தின் ஆகூழிலே பாடல் வீடியோவாக வெளியாகி உள்ளது. இப்பாடலுக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் ஏற்கனவே படத்தின் முதல் சிங்கிளாக வெளியானது.

இப்படத்திற்கான பின்னணி இசையை எஸ் எஸ் தமன் அமைத்துள்ளார். படத்தொகுப்பை கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் கையாண்டுள்ளார். வசனங்களையும் பாடல்களையும் மதன் கார்க்கி எழுதியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் ‘ராதே ஷியாம்’ வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

‘ராதே ஷியாம்’ திரைப்படம் மார்ச் 11 அன்று உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வழியாக வெளியாக உள்ளது. இதே போல் மார்ச் 10 அன்று வெளியாகும் ET படத்தின் தமிழக உரிமையையும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் யுவன் குரலில் வெளியான ஆகூழிலே.. பாடல் வீடியோ..