‘வலிமை’ படம் மூலம் முதன் முதலாக நெகிழ்ந்து டுவிட் செய்த வில்லன் கார்த்திகேயா!!

வலிமை பட ரிலீசுக்கு பின்னர் கார்த்திகேயா டுவிட் செய்து நெகிழ்ந்த தருணம்!

H Vinoth,Ajith, Ajithkumar, Boney Kapoor, Huma, Huma Qureshi, Kartikeya Gummakonda, Pugazh, Chaitra Reddy, Valimai 25-Feb-2022: இயக்குனர் H. வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படம் நேற்று (24.02.2022) திரையரங்கில் வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் ரிலீசாகி உள்ளது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதுவரை இந்திய திரைப்படங்களில் அதிக ரசிகர்கள் பார்க்க ஆர்வம் காட்டும் படமாக வலிமை படம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. BOOK MY SHOW தளத்தில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களால் விரும்பப்பட்டுள்ளது. வலிமை படத்தில் வில்லனாக கார்த்திகேயாவும், அஜித்திற்கு நண்பியாக ஹூமா குரேஷி, ராஜ் ஐயப்பா நடிக்க, கதிர் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றியுள்ளார்.

இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா உடன் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். போனி கபூருடன் இணைந்து ஜி ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. வலிமை படத்தை சினிமா பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இரண்டு முறை தேசிய விருது வென்ற தயாரிப்பாளர் BOFTA தனஞ்செயன், மற்றும் அருண் விஜய், வெங்கட் பிரபு, விக்னேஷ் சிவன் ஆகியோரும் வலிமை படத்தை பார்த்து கருத்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வலிமை படத்தின் வில்லன் நடிகர் கார்த்திகேயா டிவிட்டரில் டிவீட் செய்து நெகிழ்ந்துள்ளார். அதில், “நரேன் கதாபாத்திரம் ஒரு வாழ்நாள் நினைவு.. Overwhelmed என்பது நான் பயன்படுத்தக்கூடிய மிகச் சிறிய வார்த்தை. வினோத் சார், சூப்பர் கிரேட் ஃபுல் நான் இதை செய்ய முடியும்னு நம்பிக்கை வைத்ததற்கு. அஜித் சார் போல இப்படி ஒரு மனிதனை என்னை சந்திக்க வைத்த கடவுளுக்கு நன்றி. அற்புதமான ஆதரவிற்கும் அன்பிற்கும் அஜித் சார் ரசிகர்களுக்கு மிகப்பெரிய நன்றி. போனி கபூர் சார், ஹுமா குரேஷி, நிரவ் ஷா சார், யுவன் சார், பானி, ராஜ் அய்யப்பா மற்றும் வலிமையின் அங்கமாக இருந்த அனைவருக்கும் நன்றி ?” என டிவீட் செய்துள்ளார்.