‘வலிமை’ பட வாய்ப்பு.. டிவி சீரியல் நடிகைக்கு குவியும் வாழ்த்துக்கள்!

வலிமை பட வாய்ப்பு மகிழ்ச்சியில் டிவி சீரியல் நடிகை!

Ajith, Ajithkumar, H Vinoth, Boney Kapoor, Pugazh, Huma, Huma Qureshi, Chaitra Reddy, Valimai 25-Feb-2022: எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான வலிமை படம் நேற்று அனைத்து திரையரங்கிலும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதில் அஜித்துடன் பலர் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர், அவர்களில் டிவி நடிகையான சைத்ரா ரெட்டி பெரும்பான்மையாக கவனிக்கப்படும் கதாபத்திரமாக திகழ்ந்துள்ளார்.

சைத்ரா ரெட்டி

படம் இணைய குற்றங்கள் சம்பந்தப்பட்ட கதை என்பதால் படத்தில் சைபர் கிரைம் பிரிவு அதிகமாக காட்டப்பட்டுள்ளது. அதில் சைபர் கிரைம் பெண் அதிகாரியாக சைத்ரா ரெட்டி நடித்திருந்தார். படத்தை பார்க்கும் அனைவரின் மத்தியிலும் யார் இவர் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலதிகாரியான அஜித் சொல்கின்ற ஆலோசனைகளை உடனடியாக கேட்டு மிகவும் துறு துறுவென நடித்திருந்தார் சைத்ரா ரெட்டி.

அஜித் படத்தில் நடிக்க தங்களுக்கும் வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்குபவர்கள் மத்தியில் சைத்ரா ரெட்டி தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக சிறப்பாக பயன்படுத்தியிருக்கிறார். ‘வலிமை’ படத்துக்காக தனக்கு கொடுத்த இந்த வாய்ப்பு சைத்ராவிற்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

அது குறித்து அவர் குறிப்பிடுகையில் “வலிமை படத்திற்காக எனக்கு பல போன் மெசேஜ்கள், போன் அழைப்புக்கள் வந்துகொண்டிருக்கிறது. இந்த அளவிற்கு ரீச் ஆகும் என்று நான் நினைக்கவில்லை, என்மீது அன்பு செலுத்துவோருக்கும் எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி” இது எனக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.