சிம்புவின் காரெக்டரில் களம் இறங்கும் நாகசைதன்யா!

சிம்புவாக களம் இறங்கும் நாகசைதன்யா!

Naga Chaitanya, Pooja Hegde, Venkat Prabhu, Simbu, Silambarasan, Yuvan Shankar Raja, Maanaadu 25-Feb-2022: தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் நாகசைதன்யா, சிம்பு படத்தின் ரீமேக்கில் களம் இறங்குவதாக தகவல்கள் வந்துள்ளன.

நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய திரைப்படம் ‘மாநாடு’. டைம் லூப் திரில்லர் கதையம்சம் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ‘மாநாடு’ திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். மேலும் இந்த திரைப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார்.

மாநாடு படத்தில் சிம்புவுடன் எஸ்.ஜே சூர்யா ,பிரேம்ஜி, கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்.எ.சந்திரசேகர், கருணாகரன், அரவிந்த் ஆகாஷ், அஞ்செனா கீர்த்தி, உள்ளிடோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த ஜனவரி மாதத்தில் தெலுங்கு நடிகர் ராணா டகுபதியின் தந்தை தன்னுடைய சுரேஷ் புரொடக்சன்ஸ் மூலம் மாநாடு திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் மற்றும் பிற மொழியில் ரீமேக் செய்வதற்கான உரிமத்தை பெற்றிருப்பதாக தெரிவித்திருந்தார்.

சிம்பு – நாகசைதன்யா

இந்த நிலையில் தற்போது மாநாடு திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கிற்கான பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தெலுங்கு ரீமேக்கையும் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் நாகசைதன்யா, சிம்பு கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் நடிகை பூஜா ஹெக்டேவும் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.