முதல் நாளில் சென்னையில் வலிமை படத்தின் வசூல் இவ்வளவு கோடியா!!

வலிமையின் முதல் நாளில் சென்னை வசூல் நிலவரம்!

Ajith, AjithKumar, H Vinoth, Boney Kapoor, Huma Qureshi, Kartikeya Gummakonda, Valimai 25-Feb-2022: அஜித்தின் வலிமை படம் பிரம்மாண்டமாக நேற்று (24-02-2022) எல்லா இடங்களிலும் வெளியாகி இருந்தது. படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஹேப்பியாக கோலாகலமாக கொண்டாடினார்கள். காரணம் படம் அவர்கள் எதிர்பார்ப்புப்போல் பிரமாண்டமாக இருந்துள்ளது.

டிக்கெட் புக்கிங் தொடர்ந்து ஹவுஸ் புல்லாக நடக்கிறது, விநியோகஸ்தர்கள் எல்லாமே பெரும் சந்தோஷத்தில் உள்ளார்கள். படம் ரிலீஸ் பிறகு ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்ப்பது வசூல் பற்றிய நிலவரம் தான்.

அந்த வகையில் சென்னையில் படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. முதல் நாள் மட்டும் படம் ரூ. 1.82 கோடி வசூலித்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

இது அஜித்தின் சினிமா பயணத்தில் சிறந்த ஓபனிங் பெற்றுள்ள படமாக அமைந்துள்ளது. இன்று வலிமை படத்தின் முதல்நாள் மொத்த வசூல் நிலவரம் தெரிய வரும் என்று கூறப்படுகிறது.