விக்ரம் வேதா இந்தி ரீமேக்கின் ‘விக்ரம்’ பர்ஸ்ட் லுக்!
Vikram Vedha, Hrithik Roshan, Saif Ali Khan, Radhika Apte, Pushkar Gayathri 24-Feb-2022: விக்ரம் வேதா இந்தி ரீமேக் படத்தின் அடுத்த பர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலாகி வருவதுடன் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் தமிழில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘விக்ரம் வேதா’. சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.

இப்படத்தின் இந்தி ரீமேக்கில் மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலி கானும் , விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷனும் இணைந்து நடித்து வருகின்றனர். தமிழில் விக்ரம் வேதா இயக்கிய புஷ்கர் – காயத்ரி இப்படத்தை இந்தியிலும் இயக்கி வருகின்றனர். ஷ்ரதா ஸ்ரீநாத் கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தேவும், கதிர் கதாபாத்திரத்தில் ரோஹித் சரவும் நடிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் இப்படம் குறித்து அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் விக்ரமுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.