புதிய பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் பற்றிய வெளிவந்த ப்ரோமோ வீடியோ!

புதிய பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொகுப்பாளர் பற்றிய ப்ரோமோ வீடியோ!

Kamal Hassan, Simbu, Silambarasan, STR, Bigg Boss Tamil, Bigg Boss Ultimate, Bigg Boss Ultimate Tamil, Bigg Boss 24-Feb-2022: ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாகவும், இந்த பிக்பாஸ் அல்டிமேட் சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.

ஆனால் பிப்ரவரி 20 ஆம்‌ தேதி எபிஸோடுக்குப்‌ பிறகு‌ பிக்பாஸ்‌ அல்டிமேட்‌ நிகழ்ச்சியிலிருந்து தான் விலகுவதாக அறிவித்திருந்தார். அதில் “தமிழில்‌ பிக்பாஸ்‌ நிகழ்ச்‌சி நாள்தொட்டு அதன்‌ அங்கமாக இருந்து ரசிகர்களுடன் உரையாடி வந்த எனக்கு இது மிகப்பெரிய வருத்தம். விஜய்‌ தொலைக்காட்சியின்‌ நிர்வாகம்‌, எனது இந்த முடிவுக்கு சிறந்த என்னோடு ஒத்துழைத்தார்கள்‌. இந்த இக்கட்டான சூழலில் டிஸ்னி ப்ளஸ்‌ ஹாட்ஸ்டார்‌ மற்றும்‌ விஜய்‌ டிவி நிர்வாகம்‌ எனக்களித்த‌ அன்பும்‌ ஆதரவும்‌ என்னை நெகிழச் செய்துள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் “என் விலகலால் உண்டாகும் சிரமங்களுக்காக அவர்களிடமும் எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்‌. இது மிகச்‌சிறிய, தற்காலிக இடைவெளியே, விரைவில்‌ பிக்பாஸ்‌ சீசன்‌ 6 இல் சந்திக்கிறேன்‌” என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை இனிமேல் நடிகர் சிம்பு தொகுத்து வழங்க உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதற்கான புதிய ப்ரோமோவை பிக்பாஸ் அல்டிமேட் குழு சார்பாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது.