அரபிக் குத்து பாடகி பால்கனியில் நடன வீடியோ வைரல்!

ஜொனிதா காந்தி அரபிக் குத்து பாடலுக்கு பால்கனியில் நடனம்!

Jonita Gandhi, Vijay, Anirudh Ravichander, Sivakarthikeyan, Nelson Dilipkumar, Yogi Babu, Sun Pictures, Kalanithi Maran, Beast 24-Feb-2022: பீஸ்ட் படத்தில் இருந்து வெளியாகிய அரபிக் குத்து பாடல் பல்வேறுபட்ட கலைஞர்களாலும் நடிகர் நடிகைகளாலும் மாறுபட்ட டான்ஸ் மூலம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்நிலையில் இப்பாடலை பாடிய ஜொனிதா காந்தி பால்கனியில் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் படத்தின் புதிய அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகின்றன. இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக் குத்து பாடலை படக்குழு வெளியிட்டிருந்தது. அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் எழுதியுள்ள இப்பாடல் பல சாதனைகளை படைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இப்பாடலில் பலரையும் கவர்ந்த விஜய்யின் நடனம் அனைவரையும் நடனமாட வைத்துள்ளது.

தற்போது அரபிக் குத்து பாடலை பாடிய பாடகி ஜொனிதா காந்தி பால்கனியில் நடனமாடி வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இவர் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.