வலிமை படம் பார்த்து அருண் விஜய் கூறிய விமர்சனம்!வைரலாகும் தகவல்..

அருண் விஜயின் வலிமை பட கருத்து வைரல்!

Ajith Kumar, Ajith, Huma Qureshi, Kartikeya Gummakonda, H Vinoth, Yuvan Shankar Raja, Boney Kapoor, Arun Vijay, Yogo Babu, Valimai 24-Feb-2022: இயக்குனர் H. வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி பட்டையை கிளப்பிக்கொண்டு இருக்கிறது.

மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் ரிலீசாகி உள்ளது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வலிமை படம் BOOK MY SHOW தளத்தில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களால் விரும்பப்பட்டுள்ளது. இதுவரை இந்திய திரைப்படங்களில் அதிக ரசிகர்கள் பார்க்க ஆர்வம் காட்டும் படமாக வலிமை படம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வலிமை படத்தில் வில்லனாக கார்த்திகேயாவும், அஜித்திற்கு நண்பியாக ஹூமா குரேஷி, ராஜ் ஐயப்பா நடிக்க, கதிர் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயனும் பணியாற்றியுள்ளார்.

மேலும் நிரவ் ஷா ISC ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றியுள்ளார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்க, யுவன் சங்கர் ராஜா உடன் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். போனி கபூருடன் இணைந்து ஜி ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

வலிமை படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய விலைக்கு மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 607 திரையரங்குகளில் வலிமை படம் ரிலீசாகி உள்ளது. இந்த படத்தை பார்க்க நடிகர் அருண் விஜய் FDFS காட்சிக்கு சென்று படம் பார்த்துள்ளார்.

படம் பார்த்துவிட்டு டிவிட்டரில் “எல்லா வழிகளிலும் அஜித் சாரின் Screen Presence!!??❤ டாப் நாட்ஷ் ஆக்ஷன் குறிப்பாக பைக் ஸ்டண்ட்… கிளாப் இறுதியில் ஒரு தேவையான செய்தி… வலிமை படம் ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு பெரிய விருந்தாகும்… வலிமை டீமுக்கு பாராட்டுக்கள்.” என கூறியுள்ளார்.