கனிஹாவின் இன்ஸ்டாகிராம் புகைப் படங்கள் இணையத்தில் வைரல் 24 பிப்ரவரி 2022

Kaniha 24th Feb 2022

Kaniha , Actress, Celebrity, Model, TV Presenter 24th Feb 2022 : திவ்யா வெங்கடசுப்ரமணியம் என்கிற கனிஹா, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத் திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்திய நடிகை. 2002 இல் அறிமுக நாயகன் பிரசன்னாவுடன் சுசி கணேசனின் இயக்கத்தில் நடித்த ஃபைவ் ஸ்டார் திரைப்படம் அவரது முதல் படம். மாதவனுடன் எதிரி, அஜித்குமாருடன் வரலாறு மற்றும் டான்சர் ஆகிய படங்களில் நடித்தார். இவர் சுதீப்புடன் கன்னட திரைப்படமான அண்ணாவ்ரு, ராஜகுமாரி மற்றும் சை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

எண்ணிட்டும், ஆபிரகாமின்டே சந்தாதிகள், ருத்ர சிம்ஹாசனம், மைலாஞ்சி மொஞ்சுள்ள வீடு, டூ நூரா வித் லவ், ஒரிசா, பவுட்டியுடே நாமத்தில், ஸ்பிரிட், கோப்ரா, துரோணா, மை பிக் ஃபாதர் மற்றும் பாக்யதேவதா போன்ற பல மலையாளத் திரைப்படங்களில் நடித்தார். அவர் பாக்யதேவதாவுக்காக சிறந்த நடிகைக்கான கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்க விருதைப் பெற்றார் மற்றும் அதே திரைப்படத்துக்கு சிறந்த மலையாளம் நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

ஜெனிலியாவுக்கு சச்சின் (2005), சதாவுக்காக அந்நியன் (2005) மற்றும் ஷ்ரியா சரணுக்கு சிவாஜி: தி பாஸ் (2007) ஆகிய மூன்று படங்களுக்கு டப்பிங் கலைஞராக பணியாற்றினார். கலக்க போவது யாரு(விஜய் டிவி), மெகா தங்கவேட்டை(சன் டிவி), ஆண்டு சுட்டி விகடன் குழந்தைகள் வினாடி வினா நிகழ்ச்சி(சன் டிவி), திருவிளையாடல் தொடர்(சன் டிவி), சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்(ஏசியாநெட்), உக்கிரம் உஜ்வலம்(மழவில் மனோரமா) , கிராண்ட் மேஜிகல் சர்க்கஸ்(அம்ரிதா டிவி) மற்றும் கேரளா டான்ஸ் லீக்(அமிர்தா டிவி) போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கு பற்றினார்.

எப்போதும் சமூக வலைதளங்களில் தீவிரமாக இருக்கும் நடிகை கனிகா, சமீபத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்த படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.