கமலுக்கு பதிலாக பிக்பாஸ் அல்டிமேட் ஓடிடி இனை தொகுத்து வழங்குவது யார்? வெளியான பரபரப்பு தகவல்!

பிக்பாஸ் அல்டிமேட் ஓடிடி பற்றிய பரபரப்பு தகவல்!

Kamal Haasan, Simbu, Silambarasan, Ramya Krishnan, Logesh Kanagaraj, Vikram, Bigg Boss Tamil, Bigg Boss Ultimate, Bigg Boss 24-Feb-2022: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் 5 சீசன் நிகழ்ச்சிகளையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இதனைத் தொடர்ந்து டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக தொடங்கிய பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியின் முதல் சீசனை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கினார். இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நிலையில், அண்மையில் அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து ஒரு சில காரணங்களால் விலகுவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

அவர் விலகுவதற்கு கரணம், நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் பொழுது, கொரோனா சூழலால் அவர் நடித்து வந்த “விக்ரம்” திரைப்பட பணிகள் தள்ளிப் போனதாகவும், தற்போது அந்த பணிகளை மீண்டும் தொடங்கி இறுதி பணிகளை முடிக்க வேண்டும் என்றால், இப்போது அந்த பணிகளில் ஈடுபட வேண்டும். இல்லை என்றால் மற்ற முன்னணி நடிகர்களின் தேதிகள் வீணாகும், அவர்கள் ஒப்புக்கொண்ட பணிகளை செய்ய முடியாமல் போய்விடும், அது முறையல்ல, எனவே அந்த காரணங்களால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகி விக்ரம் திரைப்பட பணிகளில் ஈடுபட போவதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 5 சீசன்களை விஜய் டிவியில் தொகுத்து வழங்கியது போலவே 6-வது சீசனும் வரும் என்பதை மறைமுகமாக குறிப்பிட்ட நடிகர் கமல்ஹாசன், அந்த 6-வது சீசனை விரைவில், தான் தொகுத்து வழங்க இருப்பதாகவும், அந்த சீசனில் ரசிகர்களை மீண்டும் சந்திக்க இருப்பதாகவும், அவரது அறிக்கையில் நடிகர் கமல்ஹாசன் குறிப்பிட்டிருந்தார். இதனிடையே பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் இருந்து கமல்ஹாசன் வெளியேறினாலும், 6 வது சீசனில் அவர் எப்போது தொகுத்து வழங்குவார் என்று ரசிகர்கள் ஒருபுறம் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியான, பிக்பாஸ் அல்டிமேட் என்கிற இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகும் புதிய தொகுப்பாளர் யார் என்கிற அறிவிப்பை அறிவிக்கவிருப்பதாக டிஸ்னி+ஹாட்ஸ்டார் தெரிவித்திருக்கிறது. இதற்கென முகம் காட்டாத தொகுப்பாளரை நிற்க வைத்து ஒரு போட்டோஷூட் எடுத்து வெளியிட்டு இருக்கிறார்கள். அதில் இன்று, அதாவது பிப்ரவரி 24ஆம் தேதி அறிவிப்பு ஒன்று இருப்பது இருக்கிறது என்று குறிப்பிடப்படுகிறது.

முன்னதாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகும் அந்த தொகுப்பாளர்கள் யார் என்று பேச்சி ரசிகர்களிடத்தில் வைரலாகி வந்தது. அதன்படி நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர் சிலம்பரசன் இவர்களில் யாராவது ஒருவர் தான் இருக்கும் என்றும், இன்னும் குறிப்பாக சிலம்பரசன் தொகுத்து வழங்குவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு என்றும் ரசிகர்கள் பேசி வந்தனர். இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு பதில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகும் அந்த தொகுப்பாளர் யார் என்கிற அந்த மில்லியன் டாலர் கேள்விக்கு பதில் தெரிய போகிறது..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுப்பாளராக மட்டுமல்லாமல் வாரம் ஒருமுறை வந்து, தான் கற்றதை ஹவுஸ்மேட்ஸ் அனைவருக்கும் பகிர்ந்து, அவர்களிடமிருந்து தான் கற்றவற்றை மக்களுக்கு தெரிவித்து, கிட்டத்தட்ட ஒரு அறிவுப் பகிர்தலை நிகழ்த்துவார். இதனாலேயே கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பொருந்தி போய்விட்டார். மக்கள் மனதிலும் நடிகர் கமல்ஹாசன், பிக்பாஸ் நிகழ்ச்சியை வழிநடத்தும் ஒருவராகவே பார்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.