வலிமை பட ஹீரோயின் ஹூமா குரோஷி அஜித் படத்தை தவற விட்டது பற்றி கூறிய தகவல்!

என் சினிமா வாழ்க்கையில் இது முக்கியமான படம்.. பகிர்ந்த ஹூமா குரோஷி!

Huma Qureshi, Kartikeya Gummakonda, Ajith Kumar, Ajith, Thala, Boney Kapoor, H Vinoth, Valimai 23-Feb-2022: இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஹூமா குரோஷி வலிமை படம் குறித்தும், நடிகர் அஜித் பற்றியும் மனநிறைவுடன் பகிர்ந்துள்ளார்.

நடிகர் அஜித் நடிப்பில், இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் நாளை (24.02.2022) ‘வலிமை’ திரைப்படம் வெளிவர இருக்கிறது. இதில் ஹுமா குரேஷி, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா, போன்ற பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். அஜித், எச்.வினோத், போனி கபூர் கூட்டணியில் ‘நேர்கொண்ட பார்வை’ படம் வெளியாகி வருமான ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு இவர்கள் கூட்டணியில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்ததை பற்றி நடிகை ஹூமா குரேஷி பகிர்ந்துள்ளார். அவர் கூறியது “வலிமை எனது சினிமா வாழ்க்கையில் மிகவும் சிறப்பான ஒரு படம், எனது திறமையை பரிசோதித்து கொள்ள இதன் மூலம் எனக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்துள்ளது. இயக்குனர் வினோத் சார் என்னுடைய கேரக்டரை நேர்மையான போலீஸ் அதிகாரியாக, நிறைய ஆக்சன் காட்சிகளைக் கொண்ட பாத்திரமாக சிறப்பாக உருவாக்கியுள்ளார்.

ஒவ்வொரு முறையும், எங்களுடைய ஆக்சன் பிளாக்குகள் என்றாலே, நான் உற்சாகமாக இருப்பேன். பொதுவாக, ஒரு ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படத்தில் ஆண் கதாப்பாத்திரங்களுக்கு மட்டுமே அதில் நடிக்கும் வாய்ப்புகள் கூடுதலாக இருக்கும், ஆனால் வினோத் சார் பெண் கதாபாத்திரங்களைக் கணம் மிகுந்த பாத்திரமாக உருவாக்கி திரைத்துறைக்கு முன்னுதாரணமாக பெருமைப்படுத்தியுள்ளார். குறிப்பாக, எனது கதாப்பாத்திரம் திரையில் நிறைய இடத்தைப் பெற்றிருப்பதைக் காண மிக மகிழ்ச்சியாக உள்ளது.

நடிகர் அஜித் பற்றி அவர் மேலும் கூறுகையில், முன்னதாக “பில்லா 2 படத்தில் நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டியது, ஆனால் சில காரணங்களால் அது தடைப்பட்டு விட்டது. வலிமை படத்திற்கான அழைப்பு வந்தபோது, நான் இந்தியத் திரையுலகின் மிகப் பெரிய நடிகர்களில் ஒருவருடன் திரையைப் பகிரப் போகிறேன் என்பது, எனக்கு மிகப்பெரும் உற்சாகத்தை தந்தது. வலிமை படத்தில் அஜித் சாருடன் இணைந்து நான் நிறைய காட்சிகளில் வருகிறேன். எங்கள் காட்சிகளை ரசிகர்கள் கண்டிப்பாக கொண்டாடுவார்கள் என்று கூறியுள்ளார்.