ரஷ்மிகாவுடன் திருமணமா? விஜய் தேவரகொண்டா விளக்கம்!

ரஷ்மிகாவுடன் திருமணம் குறித்து விஜய் தேவரகொண்டா விளக்கம்!

Vijay Deverakonda, Rahmika Mandanna, Pushpa, Geetha Govindam, Sultan, Dear Comrade 23-Feb-2022: தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டாவிற்கும் ரஷ்மிகாவிற்கும் திருமணம் குறித்த கிசு கிசுக்களுக்கு விஜய் தேவரகொண்டா அவரது சமூக வலைத்தளத்தில் அளித்துள்ளார்.

தெலுங்கில் திரையுலகில் பிரபல நடிகையாக வளம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. தமிழில் கார்த்திக்கு ஜோடியாக ‘சுல்தான்’ படத்தில் நடித்து பிரபலமானார். தெலுங்கில் நடித்த ”டியர் காமரேட்” படம் தமிழிலும் வந்து பெரும் வரவேற்பை பெற்றது. அல்லு அர்ஜுன் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகி வசூல் குவித்த புஷ்பா படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் ராஷ்மிகாவும், முன்னணி தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவும் காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து இருப்பதாகவும் ஏற்கனவே கிசுகிசுக்கள் வைரலாகி வந்தன. இருவரும் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களும் வெளிவந்தன. இதனை ராஷ்மிகா மறுத்து இருந்தார். தனக்கு திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு போதிய வயது இல்லை என்றும், திருமணத்தை பற்றி யோசிக்க நேரம் இல்லை என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் ராஷ்மிகாவும், விஜய் தேவரகொண்டாவும் திருமணம் செய்துகொள்ள தயாராகி இருப்பதாகவும், இவர்கள் திருமணம் விரைவில் நடக்க உள்ளது என்றும் தெலுங்கு இணையதளங்களில் தீயாக தகவல்கள் பரவியது. திருமண தேதியை ரகசியமாக வைத்துள்ளனர் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் நடிகர் விஜய் தேவரகொண்டா சமூக வலைத்தளத்தில் ஓர் பதிவை பகிர்ந்துள்ளார். அதில், வழக்கம் போல் கிசுகிசுக்கப்படுகிற செய்தி தான் இது. இந்த செய்தியை ரசிக்கிறோம் என்றும் பதிவிட்டிருக்கிறார்.