பிரபல மலையாள நடிகை மரணம்! சோகத்தில் திரையுலகம்..

பிரபல நடிகையின் மரணத்தால் சோகத்தில் இருக்கும் திரையுலகம்!

KPAC Lalitha, Kadhalukku Mariyadhai, Fazil, Ilayaraja, Malayalam Actor 23-Feb-2022: பிரபல மலையாள நடிகை லலிதா உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். இவர் பல மலையாள படங்களில் தனது சிறப்பான குணச்சித்திர நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர்.

இவர் விஜய் நடிப்பில் 1997 இல் வெளியாகி சூப்பர் ஹிட்டான “காதலுக்கு மரியாதை” என்ற படத்தில் ஷாலினிக்கு அம்மாவாக நடித்தவர் நடிகை கேபிஏசி லலிதா (வயது 74). இவர் ஏராளமான மலையாள படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பல விருதுகளைப் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடிகை லலிதா உடல்நலக் குறைவால் நேற்று காலமாகியுள்ளார். அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கேபிஏசி லலிதா மலையாளம் மற்றும் தமிழ் என மொத்தம் 550க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகை லலிதாவின் மரணம் மலையாள திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.