முகென் ராவ் ரசிகர்களை பிரமிக்க வைத்த தருணம்!
Mugen Rao, Anirudh Ravichander, Manikandan, Aathmika, Gimmy Rudh, Bigg Boss Ultimate, Bigg Boss Tamil, Vettri, Velan, Mayakirriye 23-Feb-2022: பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமாகி தற்போது தமிழ் சினிமாவில் நடிகராக புதிய அவதாரம் எடுத்திருப்பவர் நடிகர் முகென் ராவ். அவர் தனது ரசிகர்களுக்கு எதிர்பாராத விதமாக ஓர் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

இசையமைப்பாளர் அனிருத் பாடிய ‘மயக்கிறியே’ என்னும் பாடலின் முன்னோட்டத்தை சென்னையில் உள்ள திரையரங்கில் சமீபத்தில் திரையிடப்பட்டது. இப்பாடலின் முதன்மை வேடத்தை ஏற்றுள்ள பிக்பாஸ் பிரபலமான நடிகர் ‘முகென் ராவ்’ ரசிகர்களிடையே திடீரெனத் தோன்றி அவர்களை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
ரசிகர்களின் பெரும் ஆராவாரத்திற்கிடையே முகென் ராவ் நடனமாடி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அவருடன் இணைந்து பார்வையாளர்களும் நடனமாடி மகிழ்ந்தனர். முகென் ராவுடன் நடிகை ஆத்மிகா இப்பாடலின் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னணி மால் ஒன்றில் தனது மனதுக்கு பிடித்தப் பெண்ணை சந்திக்கும் இளைஞர் ஒருவருக்குள் உருவாகும் உணர்வுகளின் கலவை தான் ‘மயக்கிறியே’ பாடலின் வெளிப்பாடு. அனிவீ இசையமைத்துள்ள இப்பாடலை அனிருத் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜிம்மி ரூத் இந்த இசைக் காணொலியை இயக்கியுள்ளார்.

இதற்கு மணிகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அப்சர் நடனம் அமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்பாடலுக்கு யூடியூப்பில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.