“பிக்பாஸ்” அல்டிமேட் நிகழ்ச்சியை கமலுக்கு பதிலாக நடத்துபவர் இவரா?
Kamal, Kamal Haasan, BiggBoss, Simbu, Silambarasan, Sarath Kumar, Ramya Krishnan, BiggBoss Ultimate, BiggBoss Season 5 22-Feb-2022: ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை கடந்த 5 சீசனையும், தற்போதைய “பிக்பாஸ் அல்டிமேட்” சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி கொண்டிருக்கிறார் என்பது அறிந்ததே.

முதலாவது சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின், நான்காவது சீசனில் ஆரி, ஐந்தாவது சீசனில் ராஜூ ஆகியோர் ‘பிக்பாஸ்’ டைட்டிலை வென்றிருந்தனர். ஒரிரு நாட்களுக்கு முன் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில், “தமிழில் ஓடிடியில் பிக்பாஸ் நிகழ்ச்சி டிஜிட்டல் அவதாரம் எடுத்தபோது, அதை முன்னெடுக்கும் பெருமை கிடைத்தது. டிஸ்னி+ஹாட் ஸ்டார் புரட்சியை நிகழ்த்தி இருக்கிறது. இவர்களோடு இணைந்து இந்த புதுமைப் பாதையில் பயணிப்பதில் பெருமைப்படுகிறேன்.

அனால் பின்பு லாக்டவுனில் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது. இதனால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு என்று நான் ஒதுக்கிய தேதிகளும், விக்ரம் படப்படிப்பு தேதிகளிலும் மாறின. இந்த இறுதி கட்ட படப்பிடிப்பு சமயத்தில் என்னோடு பணியாற்றும் முக்கிய பிற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுடைய தேதிகளையும் மாற்றியமைக்கும் நிலை உண்டாகும். எனவே பிக்பாஸ் அல்டிமேட் மற்றும் விக்ரம் படம் இரண்டையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள முடியாத நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது.
இந்திய சினிமாவின் முக்கிய நடிகர்களையும், கலைஞர்களையும், தொழில்நுட்ப வல்லுனர்களையும் இப்படி என் தனிபட்ட காரணங்களால் தாமதிக்கச் செய்வது நியாயமாகாது. அவர்களும் தங்களது சில பணிகளை ஒப்புக்கொண்டுள்ளார்கள். அதை அவர்கள் செய்ய வேண்டும். எனவே வேறு வழியில்லாமல், கனத்த இதயத்துடன், பிப்ரவரி 20 ஆம் தேதி எபிஸோடுக்குப் பின்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து விலகும் முடிவை எடுக்க நேர்ந்துவிட்டது” என கூறியுள்ளார்.

“தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் தொட்டு அதன் ஒரு அங்கமாக இருந்து ரசிகர்களுடன் உரையாடி வந்த எனக்கு இது மிகப்பெரிய வருத்தத்துக்கு உரியது. விஜய் தொலைக்காட்சியின் நிர்வாகம், எனது இந்த முடிவுக்கு சிறந்து என்னோடு ஒத்துழைத்தார்கள். இந்த இக்கட்டான சூழலில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் விஜய் டிவி நிர்வாகம் எனக்களித்த அன்பும் ஆதரவும் என்னை பெரிதும் நெகிழச் செய்துள்ளது.
“என் விலகலால் உண்டாகும் சிரமங்களுக்காக அவர்களிடமும் எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இது மிகச்சிறிய, தற்காலிக இடைவெளியே, விரைவில் பிக்பாஸ் சீசன்- 6 இல் சந்திக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

கமல்ஹாசன் விலகலை அடுத்து அடுத்த ஷோவை யார் தொகுத்து வழங்குவார்கள் என கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக கமல் மருத்துவமனையில் இருக்கும் போது பிக்பாஸ் நிகழ்ச்சியை சில வாரம் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்ப்பட்டது. அந்தவேளை கமல்ஹாசனுக்கு பதிலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை ரம்யாகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த “பிக்பாஸ் அல்டிமேட்டை” நடிகர் சிம்பு அல்லது சரத்குமார் தொகுத்து வழங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. இதில் சிம்புவுக்கு தான் அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.