திருமண முறிவின் பின் முதல் முறையாக படப்பிடிப்பில் களம் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருமண முறிவின் பின் தனது திரையுலக வாழ்க்கைக்குள் திரும்புகிறார்!

Dhanush, Aishwaryaa Dhanush, Rajinikanth, Aishwaryaa Rajinikanth 22-Feb-2022: நடிகர் தனுஷ் மற்றும் அவர் மனைவியும் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யாவும் பிரிய முடிவு செய்து பரபரப்பான அறிக்கையை வெளியிட்டனர். நடிகர் தனுஷ் 2004ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் 18 ஆம் தேதி, நடிகர் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதியினருக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். இவர்களின் 18 வருட திருமண வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இது தனுஷ் ரசிகர்கள் மற்றும் ரஜினி ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ் சினிமா வட்டாரத்திலும் இந்த முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

“18 வருடங்களாக நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக, நலம் விரும்புபவர்களாக ஒருவரையொருவர் புரிந்து, வளர்ச்சி, அனுசரிப்பு, எனப் பயணம் செய்தோம். இன்று நம் பாதைகள் பிரியும் இடத்தில் நிற்கிறோம். இருவரும் ஒரு ஜோடியாகப் பிரிந்து, தனிப்பட்டவர்களாக எங்களைப் புரிந்து கொள்ள நேரம் ஒதுக்க முடிவு செய்துள்ளோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனியுரிமையை எங்களுக்கு வழங்கவும்”. என அறிக்கையில் இருவரும் கூறி இருந்தனர்.

ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை வைத்து ‘3’ மற்றும் ‘வை ராஜா வை’ ஆகிய படங்களை இயக்கியவர். தற்போது லைகா நிறுவனத்துக்காக புதிய படத்தை இயக்க உள்ளார். இவர் இயக்கிய ‘சினிமா வீரன்’ என்ற ஆவண படமும், கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது.

இயக்குனர் ஐஸ்வர்யா தனது குழுவினருடன் ஒரு பாடல் வீடியோ தயாரிப்புக்காக உரையாடும் புகைப்படங்களும், இணையத்தில் சமீபத்தில் வைரலாகி இருந்தது. அச்சமயத்தில், ஐஸ்வர்யாவிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. பின் சில நாட்கள் தன்னை அவர் தனிமைப்படுத்திக் கொண்டார். மீண்டும் ஐஸ்வர்யா பாடல் வீடியோவை உருவாக்கும் வேலைகளில் களமிறங்கினார். காதலர் தினத்தில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்த புதிய பாடல் குறித்த ப்ரோமோ வீடியோவை ஐஸ்வர்யா பகிர்ந்தார்.

இந்த பாடலுக்கு அன்கித் திவாரி இந்த பாடலுக்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பல மொழிகளில் தயாராகும் இந்த பாடலை, தெலுங்கில் சாகரும், மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்த்தும், தமிழில் அனிருத்தும் பாடுகின்றனர். இந்த பாடல் வீடியோவின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இதன் BTS புகைப்படங்களை வெளியிட்டு ஐஸ்வர்யா, முதல் நாள் நன்றாக முடிந்தது ஒளிப்பதிவாளர் விஷ்ணு, ஜானி மாஸ்டர் மற்றும் எனது நான்கு அற்புதமான பாடகர்கள்! உங்கள் அனைவருக்கும் நன்றி மட்டும் சொன்னால் போதாது” என கூறியிருந்தார்.