வலிமை படத்தின் முதல் காட்சிக்கு வெங்கட்பிரபு கூறிய தகவல்! பிரேம்ஜியின் பரிதாப நிலை..

வலிமை FDFS-க்கு டிக்கெட் கேட்ட பிரேம்ஜியின் பரிதாப நிலை!

Ajith Kumar, H Vinoth, Thala, Ajith, Yuvan Shankar Raja, Boney Kapoor, Yogi Babu, Venkat Prabhu, Premgi, Valimai 22-Feb-2022: வலிமை படம் 2022 பிப்ரவரி 24 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. வலிமை படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய விலைக்கு மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக மதுரை மாவட்டத்தில் உள்ள 27 தியேட்டர்களிலும் வலிமை படம் மட்டுமே திரையிட்ப்பட உள்ளது. இதனை அந்தந்த தியேட்டர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. கிட்டத்தட்ட 45 முதல் 50 திரைகள் வரை உள்ள மதுரை மாவட்டத்தில் குறைந்தது 45 திரைகளில் வலிமை படம் திரையிட உள்ளது.

இந்த படத்திற்கான டிக்கெட் புக்கிங் ரிசர்வேசன் தொடங்கி மும்மரமாக முன்பதிவு நடந்து வருகிறது. சென்னை கிருஷ்ண வேனி, கிரீன் சினிமாஸ் ஆகிய திரையரங்குகளில் முதல் நாள் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுவிட்டன. திருச்சியில் 95% டிக்கெட்டுகள் விற்றுவிட்டன. மதுரையில் 70% டிக்கெட்டுகள் விற்றுவிட்டன. அதே போல் திண்டுக்கல், நெல்லை மாவட்டங்களிலும் டிக்கெட்டுகள் அதிக அளவில் விற்று வருகின்றன. வலிமை படத்தின் டிக்கெட்டுக்கு சந்தையில் நல்ல போட்டியும் ஆர்வமும் ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அஜித்தின் மங்காத்தா பட இயக்குனர் வெங்கட்பிரபு டிவிட்டரில் பதிவிட்டு வலிமை படத்தின் FDFS (முதல் நாள் முதல் காட்சி) டிக்கெட் கிடைத்ததாக பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் பிரேம்ஜி தனக்கும் ஒரு டிக்கெட் வேண்டும் என கேட்டார். ஆனால் அதற்கு வெங்கட்பிரபு பதில் அளிக்கவில்லை. இந்நிலையில் இவர்களின் தந்தை கங்கை அமரன் வெங்கட்பிரபு டிவீட்டுக்கு பதில் அளித்து, “வெங்கட், பிரேம்மையும் கூட படத்துக்கு கூட்டிட்டு போ” என கூறிஇருந்தார். இந்த கலகலப்பான டிவீட்டுகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.