அரபிக் குத்து பாடலின் தெறிக்கும் மாசான தகவல்!

அரபிக் குத்து பாடலின் புதிய தகவல்!

Vijay, Thalapathy, Nelson Dilipkumar, Anirudh Ravichandar, Kalanithi Maran, Sivakarthikeyan, Beast 22-Feb-2022: தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தில் அண்மையில் வெளியான பாடல் அரபிக் குத்து. இந்த பாடல் வெளியாவதற்கு முன்னதாகவே இந்த பாடல் குறித்த புரோமோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த புரோமோவில் இந்த திரைப்படத்தின் இசையமைப்பாளரான அனிருத், மற்றும் இத்திரைப்படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் மற்றும் இந்தப் பாடலை எழுதிய சிவகார்த்திகேயன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

முன்னதாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார், விஜய் நடிப்பில் தற்போது பீஸ்ட் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்துக்கு அரபிக் குத்து என்ற பாடலையே நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையமைத்திருக்கும் பீஸ்ட் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து பாடல், கடந்த பெப்ரவரி 14 ஆம் தேதி வெளியானது. இந்தப் பாடல் வெளியான முதன்நாளே மில்லியன் கணக்கான பார்வைகளை தாண்டி இந்த பாடல் சக்கைபோடு போட்டது. ரசிகர்களால் அதிகம் முணுமுணுக்கப் பட்டு வரும் பாடலாக தற்போது அரபிக் குத்து என்கிற பாடல் இருக்கிறது. குறிப்பாக இந்த பாடலில் வரும் ‘ஹலமதி ஹபி போ’ என்கிற வரிகள் மிகவும் டிரெண்ட் ஆகி உள்ளன.

இதனிடையே இசையமைப்பாளர் அனிருத், நடிகை சமந்தா, இயக்குனர் அட்லி உள்ளிட்ட பலரும் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி அவர்களது சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் பீஸ்ட் – அரபிக் குத்து பாடல் வெளியாகி 7 நாட்கள் கடந்த நிலையில் சுமார் 70 மில்லியன் பார்வைகளை தாண்டி, இந்த பாடல் ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதாவது 7 நாட்களில் 7 கோடி பார்வையாளர்களை ரசிகர்கள் மத்தியில் இந்த பாடல் கடந்துள்ளது . இது குறித்து சன் பிக்சர்ஸ் தற்போது பிரத்தியேகமாக அறிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.