அஜித்தின் படத்தில் நடிக்கும் பிரபல நடிகரின் மகன்! வெளியான சுவாரஸ்யமான தகவல்..

தல அஜித் படத்தில் பிரபல நடிகரின் மகன்!

Ajith, Thala, Valimai, Vijay Sethupathy, Boney Kapoor, H Vinoth 21-Feb-2022தல அஜித்தின் வலிமை திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வரும் 24 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் கழித்து அஜித் திரைப்படம் மீண்டும் வெளியாவதால் ரசிகர்கள் அனைவரும் வெறித்தனமான எதிர்பார்ப்புடன் காத்து கொண்டு இருக்கின்றனர்.

மேலும் தமிழ்நாடு முழுவதும் வலிமை பட முன்பதிவுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது, முன்பதிவிற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பால் வலிமை படத்தின் வசூல் பெரிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது வலிமை திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று தெரியவந்துள்ளது.

அதாவது அஜித்தின் வலிமை படத்தில் பிரபல நடிகர் விஜய் சேதுபதியின் மகன் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரின் கதாபாத்திரம் குறித்த எந்தஒரு தகவலும் தெரியவில்லை. மேலும் விஜய் சேதுபதியின் மகன் நானும் ரவுடி தான், சிந்துபாத் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.