கடை திறப்பு விழாவில் கூட்டத்தில் சிக்கிக்கொண்ட ஷகீலா! வீடியோ வைரல்!

ரசிகர் கூட்டத்தில் மாட்டிக்கொண்ட ஷகீலா!

Shakeela, Shop Opening, Cook With Comali 21-Feb-2022: நடிகை ஷகீலா அடல்ட் படங்களில் நடித்து பிரபலம் ஆனவர். ஆனால் அவர் சென்ற வருடம் விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ ஷோவில் பங்கேற்றபோது அவரது இமேஜ் முற்றிலும் மாறிவிட்டது. அது பற்றி அவரே அந்த ஷோவில் எமோஷ்னலாக பேசி இருந்தார்.

அந்த ஷோவுக்கு பிறகு ஷகீலா தனியாக யூட்டியூப்பில் சேனல் தொடங்கி அதில் பல விதமான கருத்துகள் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் ஒரு கடை திறப்பு விழாவுக்காக சென்றிருந்தார்.

அந்த வேளை ஷகீலாவை பார்க்க அதிக அளவு கூட்டம் அங்கே கூடி இருக்கிறது. அவர் திரும்பி வந்து காரில் ஏறுவதற்குள் படாத பாடு பட்டிருக்கிறார். பாதுகாவலர்கள் தான் அந்த கூட்டத்துக்கு நடுவில் ஷகீலாவை பாதுகாப்பாக கொண்டு வந்து காரில் ஏற்றி விட்டிருக்கின்றனர் என்பதை வீடியோவில் காணமுடிகிறது.

இந்தநிலையில் அவ்வீடியோவை ஷகீலாவே இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார்.