‘அரபிக் குத்து’ பாடலுக்கு மனைவியுடன் சேர்ந்து அட்லீ போடும் செம்ம குத்து டான்ஸ்.. வீடியோ வைரல்!

அட்லீ மனைவியுடன் போடும் அரபிக் குத்து டான்ஸ் வைரல்!

Vijay, Thalapathy, Atlee, Priya, Muththuraj, Beast 21-Feb-2022: விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தின் ‘அரபிக் குத்து’ பாடல் தற்போது இணையத்தில் பல டான்ஸ் கலைஞர்களால் சக்கைபோடு போடுகிறது என்பதை காணக்கூடியவாறு உள்ளது. இந்த வரிசையில் தற்போது அட்லீ மற்றும் அவரது மனைவி ‘அரபிக் குத்து’ பாடலுக்கு போட்ட கலக்கல் டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் “பீஸ்ட்”. பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. பீஸ்ட் படத்தின் ஷுட்டிங் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மெகா பட்ஜெட் படமாக உருவாக்கப்பட்டுள்ள பீஸ்ட் படத்தின் வேலைகள் கிட்டதட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த படத்தை ஏப்ரல் 14 ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி ராஜா ராணி ராஜா ராணி படத்தின் மூலம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் பார்வையையும் தன் மீது திருப்பிய இயக்குனர் அட்லீ பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற ‘அரபிக் குத்து’ பாடலுக்கு தனது மனைவியுடன் இணைந்து செம குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோவை அட்லீ தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அவர்களுடன் பிரபல கலை இயக்குனர் முத்துராஜும் ஆடியுள்ளார் என்பதும் காணக்கூடியவாறுள்ளது.

தற்போது இவர்கள் நடனமாடிய இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. முன்னதாக காதலர் தினத்தில் அட்லீயும், அவரது மனைவி பிரியாவும் சேர்ந்து எடுத்துகொண்ட புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதை தொடர்ந்து இந்த வீடியோவும் எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.