விக்னேஷ் சிவன் படத்தில் இந்தியா கிரிக்கெட் வீரர் தல தோனி!

தோனியை சந்தித்தார் விக்னேஷ் சிவன்!

MS Dhoni, Vignesh Shivan, Thala, Captain 21-Feb-2022: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தல டோனி தற்போது ஐ பி எல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பல காலமாக விளம்பர படத்தில் நடித்துக்கொண்டிருந்த தோனி தற்போது சினிமாவில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் தோனியை சந்தித்துள்ளார், அதனை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது ‘ என்னுடைய ரோல் மாடல், என்னுடைய ஹீரோ மற்றும் எனது நம்பிக்கை நச்சத்திரம் இதில் நான் அவருடன் இருக்கும் புகைப்படத்துக்கு என்ன கேப்ஷன் போட்டாலும் அது அவரை நான் சந்தித்த அந்த நொடியில் எனக்கு ஏற்பட்ட உணர்வை முழுமையாக வெளிப்படுத்த முடியாது. வாழ்க்கை ஒரு அழகிய தருணம், இந்த மாதிரியான ஒரு தருணத்தை ஏற்படுத்தி கொடுத்ததுக்கு இந்த காலத்துக்கு தான் நான் நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளேன்’ என்று உருக்கமாக கூறியிருக்கிறார்.

மேலும் நான் அவரை சந்திக்கையில் ஒரு கதையுடன் தான் சந்தித்தேன் விரைவில் அவருக்கு ஆக்ஷன் சொல்லி இயக்கும் நாள் வரும் என்று குறிப்பிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். இதில் இருந்து தோனி சினிமாவில் நடிக்க இருப்பது குறித்து சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகின்றது.