நடிகர் அஜித்தின் ஒரு படத்தை கூட இதுவரை வாங்காத முன்னணி தொலைக்காட்சி – காரணம் இதுதான்!

தொலைக்காட்சியில் அஜித் படங்கள்

Ajith Movies, Valimai, Ajith Kumar, Viswasam, Thala Ajith 21 Feb 2022 : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தல அஜித். அஜித்தின் படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யும் பொழுதும், குடும்பத்துடன் இணைந்து கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள்.

சமீபத்தில் கூட இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், அஜித் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் திரைப்படம் தற்போது வரை சன் டிவியின் TRP ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

ajith movies

மேலும் அஜித்தின் படங்களை வாங்குவதற்கு முன்னணி தொலைக்காட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், இதுவரை ஒரு முறை கூட, முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவி, அஜித் நடித்த ஒரு படத்தை கூட காசு கொடுத்து வாங்கி, டிவியில் ஒளிபரப்பு செய்யவில்லை.

விஜய் தொலைக்காட்சி அஜித்தின் படங்களை இதுவரை ஒரு முறை கூட ஒளிபரப்பு செய்யாதது, அஜித்தின் ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுக்கும் நிலையில், அதற்கான காரணம் நடிகர் அஜித்தை விஜய் டிவி கொண்டாடி வந்தாலும், மற்றைய தொலைக்காட்சிகளுடன் போட்டியிட்டு அஜித் படங்களை வாங்க முடியவில்லையாம். குறிப்பாக சன் தொலைக்காட்சியுடன் போட்டியிட்டு அஜித் படங்களை வாங்குவதில் விஜய் தொலைக்காட்சி பெரும் தோல்விகளை சந்த்தித்து வருகிறதாம்.