வலிமை படத்தின் புதிய ஆக்ரோஷமான மாஸ் வீடியோ ப்ரோமோ வெளியானது!

அஜித்தின் மாஸ் சேஸிங் காட்சிகளுடன் வெளியான வலிமை வீடியோ ப்ரோமோ!

Ajith Kumar, Ajith, Boney Kapoor, H Vinoth, Kartikeya Gummakonda, Valimai 19-Feb-2022: வலிமை படம் 2022 பிப்ரவரி 24 ஆம் தேதி ரிலீசாகும் என புதிய போஸ்டர் மூலம் தயாரிப்பாளர் போனிகபூர் சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.

வலிமை படத்தின் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களின் ரிலீஸ் உரிமையை கோபிசந்த் இனாமுரியின் IVY புரொடக்சன்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. வலிமை படத்தின் கேரள தியேட்டர் ரிலீஸ் உரிமையை புஷ்பா, மாநாடு படங்களை ரிலீஸ் செய்த ‘E4 Entertainment’ நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

வலிமை படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய விலைக்கு மதுரை அன்புச்செழியனின் ‘கோபுரம் பிலிம்ஸ்’ கைப்பற்றியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வலிமை படத்தின் புதிய முன்னோட்டத்தை நேற்று முந்தினம் போனிகபூர் வெளியிட்டு இருந்தார். அந்த முன்னோட்டம் 1.5 மில்லியனை கடந்து படு வைரலாகியது. பின் வெளியான நாங்க வேற மாரி பாடலின் ப்ரோமோ வீடியோவும் 1 மில்லியனை கடந்துள்ளது. நேற்றும் புதிய ப்ரோமோ வீடியோவை போனி கபூர் வெளியிட்டிருந்தார். பக்கா மாஸ் காட்சிகளோடு, பஸ் சண்டைக்காட்சியோடும் அந்த ப்ரோமோ அமைந்திருந்தது. நேற்று தாய் பாச காட்சிகள் நிறைந்த ஒரு ப்ரோமோவும், ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இரண்டு ப்ரோமோக்களும் வெளியாகி உள்ளன என்பதும் அறிந்ததே.

இன்று (19.02.2022) மதியம் மீண்டும் ஒரு ப்ரோமோ வீடியோவை போனி கபூர் வெளியிட்டுள்ளார். பஸ், பைக், இரும்பு குண்டு, கட்டை உடைய சண்டைக்காட்சிகள் இந்த ப்ரோமோவில் இடம் பெற்றுள்ளது. லாரியுடன் பஸ் மோதும் காட்சிகளுடன் அஜித்துடன் பைக் ரேசர் வில்லன் கேங் மோதும் ஆக்ரோஷமான காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்த படத்தில் வில்லனாக கார்த்திகேயாவும், அஜித்திற்கு நண்பியாக ஹூமா குரேஷியும் நடிக்கின்றனர். ராஜ் ஐயப்பா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் கதிர் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். மற்றும் சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் போனி கபூருடன் இணைந்து ஜி ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது என்பதும் இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.