குடி போதையில் கைது செய்யப்பட்டார் தமிழ் சினிமா நடிகை! பரபரப்பு தகவல்!

குடி போதையில் கைதான நடிகை! கரணம் இதுதான்

Kavya Thapar, Vijay Antony, Market Raja MBBS 19-Feb-2022: பிரபல இளம் நடிகை காவ்யா தாப்பர் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். காவ்யா தாப்பரின் முதல் படம் ‘தட்கல்’ என்ற இந்தி குறும்படமாகும். பதஞ்சலி, மேக்மைட்ரிப் மற்றும் கோஹினூர் உள்ளிட்ட விளம்பரங்களிலும் அவர் நடித்துள்ளார். அவரது தெலுங்குப் படம் ஈ மாயா பெரேமிட்டோ 2018 இல் வெளியானது. இந்தப் படம் அவரது முதல் தெலுங்குப் படமாக அமைந்தது. 2019 இல் அவரது தமிழ் திரைப்படம் ‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ வெளியானது. இந்தப் படம்தான் அவரது முதல் தமிழ்ப் படமாகவும் அமைந்தது. இப்போது விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக புதிய படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பணியாற்றியுள்ள காவ்யா தாப்பர் வயது 26 வியாழக்கிழமை அதிகாலையில் கைது செய்யப்பட்டார், அவர் குடிபோதையில் ஒரு கான்ஸ்டபிளை கெட்ட வார்த்தையில் துஷ்பிரயோகம் செய்து சண்டையிட்டதாக கூறப்படுகிறது. காவ்யா தாப்பர் வெள்ளிக்கிழமை அந்தேரி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.

நள்ளிரவு 1 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. ஜே டபிள்யூ மேரியட் ஹோட்டலுக்கு அருகில் காவ்யா தாப்பர் தனது ஆண் நண்பர்களுடன் இரவு விருந்தில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. காவ்யா தாப்பர் குடிபோதையில் காரை வேறொரு வாகனத்தில் மோதியுள்ளார். போலீசாருக்கு தகவல் கிடைத்ததும், அவர்கள் அந்த இடத்தை அடைந்தனர், அவர்கள் நடிகையை விசாரிக்கத் தொடங்கியபோது, ​​​​நடிகை அவர்களை கெட்ட வார்த்தைகளால் திட்டி, அவர்களைக் கையாள முயன்றதாக கூறப்படுகிறது.

கான்ஸ்டபிள் தனது அறிக்கையில் போலிஸ் சம்பவ இடத்திற்கு வந்தபோது, ​​​​நடிகை அவர்களை துஷ்பிரயோகம் செய்ததாகவும், தடுக்க முயன்றபோது போலிஸ்காரரின் சீருடை காலரைப் பிடித்ததாகவும் அறிக்கையில் கூறியுள்ளார்.

இதன் அடிப்படையில் காவ்யா தாபர் கைது செய்யப்பட்டு அந்தேரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பைகுல்லா பெண்கள் சிறைக்கு அனுப்பப்பட்ட அவர், ஜாமீன் கிடைக்கும் வரை அங்கேயே இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. போலீசார் அவர் மீது ஐபிசி 353,504,332,427 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.