50 மில்லியனை கடந்த ‘பீஸ்ட்’ | 5 மில்லியனை நெருங்கும் ‘எதற்கும் துணிந்தவன்’

Beast Vs EtharkkumThunindhavan

Beast, EtharkkumThunindhavan 19-Feb-2022 : பீஸ்ட் பாடல் வெளியாகி நான்கு நாட்கள் கடந்த நிலையில் தற்போது 53 மில்லியன் பார்வைகளை கடந்து யூடியூப்பில் டிரெண்டிங்கில் முதலிடத்திலுள்ளது . இது 3 மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ டீசர் பதினேழு மணித்தியாலங்களில் 4.1 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளதுடன் 6.4 இலட்சம் லைக்குகளையும் பெற்றுள்ளது.

விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் பீஸ்ட் படத்தில் தற்போது நடித்து வருகிறார்.அவருடன் இப்படத்தில் பூஜா ஹெக்டே, யோகி பாபு, செல்வராகவன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். பீஸ்ட் படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். ஏற்கனவே நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் இந்த படத்தின் பாடலின் நடனம் மற்றொரு லெவலில் இருக்கும் என்று கூறினார். எதிர்வரும் தமிழ் புத்தாண்டன்று விஜய் நடித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள பீஸ்ட் வெளிவர இருக்கிறது.

Beast and ET

இப்படம் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடவுள்ளது. இந்நிலையில் தற்போது பீஸ்ட்டின் முதல்ப் பாடலான அரபிக் குத்து காதலர் தினத்தில் வெளியாகியது. இப்பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். இதை பாடகி ஜோனிதா காந்தியுடன் இணைந்து பாடியுள்ளார் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர். தற்போது இப்பாடல் வெளியாகி நான்கு நாட்கள் கடந்த நிலையில் தற்போது 53 மில்லியன் பார்வைகளை கடந்து யூடியூப்பில் டிரெண்டிங்கில் முதலிடத்திலுள்ளது . இது 3 மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளது.

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்தப் படத்தின் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்திருப்பதுடன், மற்றும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் மார்ச் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஏற்கனவே இப்படத்தின் டீசர் தேதியை இயக்குனர் பாண்டிராஜ் அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி பிப்ரவரி நேற்று இப்படத்தின் டீசர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது வெளியாகி பதினேழு மணித்தியாலங்களில் 4.1 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளதுடன் 6.4 இலட்சம் லைக்குகளையும் பெற்றுள்ளது.