19 வருடங்களுக்கு பிறகு பிரசன்னாவுடன் இணையும் பிரபல நடிகை!

19 வருடங்களின் பின்பு பிரசன்னாவுடன் இணையும் கனிகா!

Prasanna, Kaniha, 5 Strar, M Balaji, Susi Ganesan 19-Feb-2022: தமிழ் சினிமாவின் சிறந்த முன்னணி நடிகர் பிரசன்னா தற்போது 19 வருடங்களிற்கு பிறகு பிரபல நடிகையுடன் ஜோடி சேரயிருக்கிறார்.

2002 ஆம் ஆண்டு இயக்குனர் சுசி கணேசன் இயக்கத்தில் வெளியான படம் ”5 ஸ்டார்” படத்தை இயக்குனர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்தில் பிரசன்னா மற்றும் கனிகா இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தில் நடிகை கனிகா அறிமுகமான பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்துவந்தார்.

இந்நிலையில் 19 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை கனிகா மீண்டும் முதல் படத்தில் அவருடன் நடித்த நடிகர் பிரசன்னாவுடன் இணைந்து நடிக்கவுள்ளார். நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்காக இந்த கூட்டணி இணைந்திருக்கிறது. இதனை நடிகை கனிகா அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு ஒரு புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.

அதில், ‘19 ஆண்டுக்கு பிறகு எனது முதல் படத்தின் நாயகன் பிரசன்னாவுடன் மீண்டும் இணைவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்க்கை ஒரு சக்கரம் என்பதை நான் இப்போது உணர்கிறேன். நடிகர் பிரசன்னாவுடன் மீண்டும் இணைந்து நடிக்கும் வாய்ப்பை எனக்கு கொடுத்த அனைவருக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்த கூட்டணி இணைய இருப்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்போடு இதனை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.