பிரபு தேவாவின் ‘முசாசி’

பிரபு தேவாவின் அடுத்த பட போஸ்டர் வெளியானது

Musasi, Mahendran, VTV Ganesh, John Vijay, Sam Rodrigues, Prabhudheva : நடன இயக்குனர், கதாநாயகன், இயக்குனர் என பல துறைகளிலும் வெற்றி நடை போடுபவர் நடிகர் பிரபு தேவா. இவரது ஐம்பதாவது படமான பொன் மாணிக்கவேல் கொரோன கட்டுப்பாடுகள் காரணமாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் சென்ற வருட இறுதியில் வெளியானது. இவரின் தேள் கடந்த பொங்கலுக்கு வெளியானது.

இவரின் வெளிவர இருக்கும் படங்கள் ‘யங் மங் சங்’, ‘ஊமை விழிகள்’,‘பஹிரா’, ‘பொய்க்கால் குதிரை’, ’மை டியர் பூதம்’ மற்றும் கன்னட படமான லக்கி மேன் என்பன அடங்கும்.தற்போது பிரபு தேவா அடுத்தாக அறிமுக இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ‘முசாசி’ எனப் பெயரிடப் பட்டுள்ளது.ஜாய் பிலிம்ஸ் பாக்ஸ் என்டர்டைமென்ட் நிறுவனத்தின் சார்பில் ஜான் பிரிட்டோ தயாரிக்கிறார்.

இப்படத்தில் விடிவி கணேஷ், ஜான் விஜய், மாஸ்டர் மகேந்திரன் போன்ற பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். இதற்கு தீர்ப்புகள் விற்கப்படும் இசையமைப்பாளர் பிரசாத் எஸ்.என் இசையமைக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கமலின் விக்ரம் படத்தை இயக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஜப்பானிய போர்வீரரான முசாசியின் பெயரை இப்படத்திற்கு வைத்திருப்பது அனைவரையும் கவர்ந்துள்ளது.