பஹாசா மொழியில் பார்த்திபன் அவதாரம்

இந்தோனேஷிய பஹாசா மொழியில் “ஒத்த செருப்பு சைஸ் 7”

R.Parthiban, Oththa Seruppu Size 7, Bahasa 18th Feb 2022 : நடிகர் பார்த்திபன் தயாரித்து, இயக்கி, தனி ஒருவனாக நடித்த படம் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’. விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற இப்படத்துக்கு 2 தேசிய விருதுகள் கிடைத்தது. இதில் சிறப்பு ஜூரி விருது பார்த்திபனுக்கும் சவுண்ட் மிக்ஸிங்கான விருது ரசூல் பூக்குட்டிக்கும் கிடைத்தது.

டொரண்டோ தமிழ் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு சிறந்த படத்துக்கான ஜூரி விருது, சிறந்த இயக்குனருக்கான ஜூரி விருது, சிறந்த தனி நடிப்புக்கானா விருது போன்றவற்றைப் பெற்றது. இப்படத்தின் தமிழ் மொழி வெற்றியை தொடர்ந்து நடிகர் அபிஷேக் பச்சனை வைத்து இந்தியில் ரீமேக் செய்து வருகிறார் பார்த்திபன்.

இந்த நிலையில், இந்த படம் இந்தோனேசியாவின் பஹாசா மொழியில் ரீமேக் செய்யப்படுகிறது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குனர் பார்த்திபன் அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நடிகர் பார்த்திபனின் “ஒத்த செருப்பு சைஸ் 7” திரைப்படம் இந்தோனேஷிய பஹாசா மொழியில் உருவாகும் முதல் தமிழ் படம் எனும் பெருமையை பெற்றுள்ளது.

OththaSeruppuSize7