தனுஷ் மகனுடன் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!

மகனுடன் தனுஷ் புகைப்படத்தை பார்த்ததுண்டா!

Dhanush, Yatra Raja, Linga Raja 17-Feb-2022: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ் என்பது தெரிந்ததே. கடந்த 18 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதி திடீரென பிரியப்போவதாக சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இது அவர்களது ரசிகர்களுக்கு மட்டுமின்றி திரையுலக பிரபலங்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் இந்த முடிவு குறித்து பல திரைபிரபலங்கள் ஆறுதலும் மனதைரியமும் அளித்து வந்தனர். தனுஷ் அவருடைய இரண்டு மகன்களுக்காக மீண்டும் ஐஸ்வர்யாவுடன் இணைந்து வாழ்வார் என்றும், இதற்காக இருவரின் குடும்பத்தினரும் முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் நடிகர் தனுஷ் அவருடைய மகன் யாத்ரா, தன்னுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அத்துடன் ’இதற்குமுன் நான் எங்கே பார்த்தேன் இதை’ என்று நடிகர் தனுஷ் அவருடைய சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் பல்வேறு கருத்துக்களோடு இணையத்தில் வைரலாகி வருகிறது.