24 மணி நேரத்தில் இத்தனை மில்லியன் பார்வைகளை கடந்த ‘ஹே சினாமிகா’ ட்ரைலர் – ரசிகர்கள் கொண்ட்டாட்டம்

துல்கர் சல்மானின் ‘ஹே சினாமிகா’ ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

Dulquer Salmaan, Aditi Rao Hydari, Kajal Aggarwal, Brinda, Hey Sinamika 17th Feb 2022 : திரைப்பட நடன இயக்குனராக வலம் வந்த பிருந்தா மாஸ்டர் தற்போது திரைப்பட இயக்குனராக களம் இறங்கி இருக்கிறார். இவர் துல்கர் சல்மான், அதிதி, காஜல் அகர்வாலை வைத்து ’ஹே சினாமிகா’ என்ற படத்தை இயக்கிவருகின்றார். கதை மற்றும் பாடலை மதன் கார்க்கி எழுத கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இப்படத்தை முதல் முறையாக தமிழில் ‘ரிலையன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கின்றது.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை தொடர்ந்து படம் பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இந்த திரைப்படம் மார்ச் மாதம் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இது தற்போது வரை ஐந்து மில்லியன் பார்வைகளைத் தாண்டியுள்ளது. ஏற்கனவே வெளியாகிய அச்சமில்லை என்ற துல்கர் சல்மான் பாடிய பாடல் 3.5 மில்லியன் பார்வைகளையும் மேகம் என்ற கோவிந்த் வசந்தா பாடிய பாடல் 2.1 மில்லியன் பார்வைகளை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.