நடிகர் சிம்புவுக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது..

சிம்புவுக்கு எதிரான வழக்கு பதிவு ரத்து!

Silambarasan, Simbu, Anirudh Ravichander, Anirudh 17-Feb-2022: தமிழ் சினிமா துறையில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு என்பது தெரிந்ததே. பல சர்ச்சைகளில் சிக்கி கொண்டாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர். சிம்புவுக்கு எதிரான வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது

சமீபத்தில் இவர் நடித்து வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சனங்களின் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. சிம்பு அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவது வழக்கமாக இருந்தது. 2015-இல் பீப் பாடலின் சர்ச்சைக்காக சிம்பு மற்றும் அனிருத் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் கோவை நீதிமன்ற விசாரணை அறிக்கையில் நடிகர் சிம்புவுக்கு எதிரான புகாருக்கு ஆதாரம் இல்லை என்பதால் வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.